Tuesday, March 12, 2013

வணக்கம்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

 தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.

மனிதனின் ஊக்கத்தினாலும் ஆக்கத்தினாலும், அறிவியல் வளர்ச்சியில் பலபடிகளை கடந்து முன்னேறிக்கொண்டிருக்கிறோம். நமது சிந்தனைகளையும், செயல்களையும் நம் முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீண்ட நாள் செயலாற்றவேண்டும் என நினைத்த போதும் வேலைச்சுமை காரணமாக தாமதப்பட்டுக்கொண்டிருந்த எண்ணம் இன்று நிறைவேறியுள்ளது.

எனது வலைத்தளம் மூலமாக தோழிகள், தோழர்கள் அனைவரிடமும் நேரடியாக பேசவேண்டும் என்ற எண்ணத்திற்கு இன்று பிள்ளையார் சுழி இட்டு என் முதல் பதிவை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்.

நிறைய பேர், “என்ன எழுத போறீங்க...?” என்று என்னிடம் கேட்டார்கள். எழுதவா ஒன்றும் இல்லை. எனக்கு பிடித்தது, என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வுகள், என் நன்றிகள், என்னுடைய ஆசைகள், நான் ரசித்தவை, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

எத்தனையோ தோழர்களையும், தோழிகளையும் பெற்றுத்தந்த இந்த வலையுலகம், பல மறக்கமுடியாத கசப்பான அனுபவங்களையும் எனக்கு தந்திருக்கின்றது. கசப்பான அந்த நிகழ்வுகளை என்னுள்ளேயே புதைத்துக்கொண்டு என் மகிழ்ச்சியை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

சில கசப்பான சம்பவங்களை என் கதைகள் மூலமாக வேண்டுமானால் சொல்ல முயற்சிக்கிறேன்.  பாலையும், தண்ணீரையும் பிரித்தெடுக்கும் அன்னப்பறவை போல அவற்றில் இருக்கும் நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு கருத்தை மனதில் பதித்துக்கொள்ளுங்கள்.

விரைவில்  “என் வளர்ச்சிப் பாதையில்....” உங்களை சந்திக்கிறேன்.

3 comments:

  1. Welcome Shenba...ungaLin eNna alaiigaLai ezhuthi vadivil vaasikka eagerly waiting...

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்திற்கு நன்றி கேவி. விரைவில் என் எண்ணங்களை பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  3. தங்களின் முயற்சிக்கு எனது இதயபூர்வ நல் வாழ்த்துக்கள்.. தங்களின் எழுத்தினை இணையத்தில் வாசிக்க காத்துக் கொண்டிருக்கிறோம் சகோ.
    வாழ்க வளமுடன்..

    ReplyDelete