அத்தியாயம் - 40
சஹானா வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டாள். பிரபுவிடமும் இயல்பாகவே பேசினாள். ஆனாலும், அன்றைய இரவு அவளது தனி அறையிலேயே கழிந்தது.
அதைப் பற்றி அவளிடம் எப்படிப் பேசுவதென்றே தெரியவில்லை. இருந்தாலும், இதைப் பற்றி அவளிடம் பேசிவிடவேண்டும் என்ற முடிவுடன் அவளது வருகைக்காக காத்திருந்தான்.
அவள் அறைக்குள் செல்லும் முன், “சஹி!” என்று தயக்கத்துடன் அவளை அழைக்க, “ம்…” என்றபடி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“இல்ல… இனியும், நீ இந்த ரூம்ல தனியா இருக்கணுமா…?” என்று கேட்டான்.
கீழுதட்டை லேசாகக் கடித்தவள், “இல்லன்னு சொல்லணுன்னு தான் நினைக்கிறேன்…” என்றதும், அவனது முகம் சற்று பிரகாசமானது.
அவனது முகத்தில் தோன்றிய மாறுதலைக் கண்டவள், சட்டென தலையைக் கவிழ்ந்து கொண்டு, “ஆனா… அதைச் சொல்ல இது சரியான நேரமான்னு தெரியல…” என்றாள்.
அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கண்டவன், “ஓகே. குட் நைட்!” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
அவனது ஏமாற்றத்தைக் கண்டுகொண்டவளுக்கு, தான் அவனை அளவிற்கதிகமாகச் சோதிக்கிறோம்’ என்று நினைத்தவள், ‘இது உங்களுக்கு மட்டுமான அக்கினிப்பரிட்சை அல்ல. எனக்கும்தான்… இதிலிருந்து நாம் இருவருமே நிச்சயம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று மனத்திற்குள் சொல்லி தன்னைத் தேற்றிக் கொண்டாள்.
அடுத்து வந்த நாட்களில் தங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைத்துக் கொள்ள, பிரபு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டான்.
காலையில் அவள் காஃபியுடன் வரும்போது, புத்துணர்ச்சியுடன் முகத்தைத் துடைத்தபடி காலை வணக்கம் சொல்வதும், இருவரும் எதிரெதிரில் அமர்ந்து காஃபி பருகியபடி பேப்பர் படிப்பதும், அவளுடன் ஏதாவது விவாதிப்பதுமாக, அவளுடன் பேசும் நேரத்தை அதிகப்படுத்திக் கொண்டான்.
அவள் எதிர்பாராத நேரங்களில் சிறுசிறு காதல் வார்த்தைகள் மூலமாக அவ்வப்போது அவளைத் திகைக்க வைப்பதையே, தனது வேலையாகக் கொண்டிருந்தான். தனது பேச்சாலும், செய்கையாலும் அவள் மீது தான் கொண்டிருக்கும் காதலை ஸ்திரப்படுத்திவிடும் நோக்கத்தில் உறுதியாக இருந்தான்.
ஒருநாள், “மதுரைல இருந்து நம்ம க்ளையண்ட் ஒருத்தர் வந்தார். உனக்குப் பிடிக்குமேன்னு மல்லிகைப்பூ வாங்கிட்டு வரச் சொன்னேன்…” என்று பெரிய பூப்பந்து ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தான்.
மற்றொரு நாள், “தெரிந்த ஒருத்தர் நகைக்கடை பிராஞ்ச் புதுசா ஆரம்பிச்சிருக்காங்கன்னு கூப்பிட்டார். போயிருந்தேன். ஒரு நெக்லஸ் டிஸைன் எனக்குப் பிடிச்சிருந்தது. வாங்கிட்டு வந்தேன். இது உனக்கு என்று சஹானாவிடம் ஒரு நகைப்பெட்டியைக் கொடுத்தான்.
அதைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்ட தங்கையிடம் “தேவி! இது உனக்கு” என்று அவளிடமும் ஒன்றைக் கொடுத்தான்.
“வாவ்! அண்ணா தேங்க்யூ!”என்றவள், நகைப்பெட்டியுடன் தனது அறைக்கு ஓடினாள்.
மாமியாரிடம் நகையைக் காட்டியவள், பெருமிதத்துடன் கணவனைப் பார்த்தாள்.
காலை நேர பரபரப்பில் இருப்பவளை, அறையிலிருந்தபடியே அழைத்தான். என்னவோ எதுவோ என்று அவசரமாக வந்தவளிடம், “மீசையை ட்ரிம் பண்ணேன்… கரெக்டா இருக்கான்னு சொல்லு” என்று கேட்டு, அவளைத் திகைக்க வைப்பான்.
அவனது சிலுமிஷங்களையெல்லாம் கண்டு அவனை முறைத்தாலும், மனத்திற்குள் அவற்றை இரசிக்கவே செய்தாள்.
அவளிடம் தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயன்றாலும், அவற்றை ஒரு எல்லைக்குள்ளேயே நிறுத்திக் கொண்டான்.
****************
“வாடா! இப்போதான் உனக்கு வீட்டுக்கு வர்ற வழி தெரிந்ததா?”
வீட்டிற்கு வந்த சூரஜ்ஜை உற்சாகத்துடன் வரவேற்றான் பிரபு.
“அதை நீ சொல்றியா?” என்றவன், என்னடா வீடே அமைதியா இருக்கு…” எனக் கேட்டான்.
“அப்பா ஆபீஸ்ல இருக்கார். தேவி காலேஜ் போயிருக்கா. அம்மாவும், சஹியும் ஒரு ஃபங்ஷன் அட்டெண்ட் பண்ண காலைல கிளம்பிப் போனாங்க… அநேகமா திரும்பி வந்திட்டு இருக்கணும்...” கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி சொன்னான்.
“அப்புறம் வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க? ஜூனியர் எப்படி இருக்கான்? ஷீலாவையும், குட்டியையும் கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல..” என்றான்.
நெற்றியைத் தடவிக் கொண்டவன், “தம்பிக்கு வர்ற வெள்ளிக்கிழமை ரிசப்ஷன்டா! அதுக்கு இன்வைட் பண்ணத்தான் வந்தேன். ஷீலா கொஞ்சம் பிஸி… அடுத்தமுறை கட்டாயம் வர்ரேன்னு உங்ககிட்டலாம் சொல்லச் சொன்னா…” என்றான் சூரஜ்.
“என்னடா! சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா கொடுக்கற? அடிக்கடி பார்த்துக்க முடியலைனாலும், டெய்லி பேசிட்டு இருக்கோம்… உன் தம்பிக்குக் கல்யாண ஏற்பாடு நடக்குதுன்னு சொல்லவேயில்ல…” வியப்புடன் கேட்டான் பிரபு.
“நீ வேற கடுப்பைக் கிளப்பாதேப்பா! எங்களுக்கே விஷயம் ரெண்டு நாளைக்கு முன்னால தான் தெரியும். பொண்ணு வீட்ல பேசி சரிசெய்து, நாளன்னைக்கு ரிசப்ஷன் வச்சிடலாம்னு முடிவெடுத்து, உங்களையெல்லாம் அழைக்க வந்தாச்சு…”
“பரவாயில்லடா உன் தம்பி… இந்த விஷயத்துல உன்னை மாதிரி தத்தியில்ல” என்று சிரித்தான்.
அவனை முறைத்தவன், “அதுக்குன்னு உன்னை மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி சூப்பர் ஃபாஸ்டும் இல்லப்பா…” என்றான் சூரஜ்.
“ஏன்டா! ஏன்? எல்லாத்தையும் தலை முழுகிட்டு இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்… பொறுக்கலையா உனக்கு?” என்றான் எரிச்சலுடன்.
“யாரு நீயா? அவளுக்கு நியாயம் பண்றேன். பிராயசித்தம் பண்றேன்னு தேவையில்லாம இன்னும் அவளுக்குப் பரிதாபப்பட்டுட்டு இருக்க… இது நல்லதுக்கில்ல.
தலைமுழுகினியா அதோட விட்டுட்டு உன் வேலையைப் பாரு. சிஸ்டருக்குத் தெரியாத வரைக்கும் உன் காட்டுல மழை. தெரிஞ்சிது…” அவன் தீவிரபாவத்துடன் சொல்லிக் கொண்டிருக்க, வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.
“அடடே சூரஜ்! வாப்பா!” கௌரி பிரியத்துடன் அவனை வரவேற்க, “வாங்கண்ணா! ஷீலா வரலையா…?” பாசத்துடன் அவனை விசாரித்தாள் சஹானா.
தான் வந்த விஷயத்தை விவரித்த சூரஜ், “எல்லோரும் குடும்பத்தோடு கட்டாயம் வந்திடணும். அம்மா நீங்களும், அப்பாவும் எந்த சாக்குப் போக்கும் சொல்லக்கூடாது… என் கல்யாணத்துக்கு வராம ஏமாத்தினமாதிரி எதுவும் செய்துடாதீங்க… சொல்லிட்டேன்” போலியான மிரட்டலுடன் சொன்னான் சூரஜ்.
“கட்டாயம் வரோம்ப்பா!” கௌரியும் சிரிப்புடன் சொன்னார்.
“சஹானா! உன்னை மதியானமே வந்திடணும்னு மேலிடத்திலிருந்து ஆர்டர் போட்டிருக்காங்க. அதனால, மறக்காம லேடீஸ் மூணு பேரும் மதியானமே நம்ம வீட்டுக்கு வந்திடுங்க” என்றான்.
புன்னகைத்தவள், “கட்டாயம் வந்திடுறோம் அண்ணா!” என்றவள், “ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க… டிஃபன் ரெடி பண்றேன்… சாப்டுட்டுத் தான் கிளம்பணும்” என்று அன்பு கட்டளை இட்டுவிட்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.
கௌரி அவனிடம் பேசிக்கொண்டிருக்க, மளமளவென உடையை மாற்றிக் கொண்டு வந்தவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.
சிறுவயதிலேயே அன்னையை இழந்தவனுக்கு, கௌரி பெறாத தாயாக அவனுக்கு பாசத்தைக் காட்டினார் என்றால், சஹானா அவனுக்கு உடன்பிறவாத சகோதரியாக பாசத்துடன் பழகினாள்.
பிரபு அவனுக்கு உற்ற நண்பன்தான். கணவனாக சஹானாவின் மீது அவன் உயிரையே வைத்திருப்பதும் தெரியும். ஆனாலும், அவளது குணத்திற்கு, இன்னும் நல்லதொரு வாழ்க்கை அமைந்திருக்கலாம் என்று பலமுறை நினைத்திருக்கிறான் சூரஜ்.
அதே யோசனையுடன் அமர்ந்திருந்தவனை, பிரபு மாடிக்கு அழைத்துச் சென்றான்.
சிட்டவுட்டில் அமர்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருக்க, சூரஜ் மெல்ல ஜோஷிதாவைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தான்.
“நீ பண்றது வீண் வேலைன்னு எனக்குத் தோணுது பிரபு. அவள் வெறிபிடிச்சவ மாதிரி நடந்துக்கறா. போன் பண்ணா எடுக்கறதில்ல… ஆஃபிஸ்க்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டியாம். நீயும் வீட்டுக்குப் போறதில்லைன்னு என் செக்ரட்டரிகிட்ட புலம்பியிருக்கா.
இது எல்லாமே ஓகே. ஆனா இப்போ நீ ரிஸ்க் எடுக்கற… இன்னைக்கு வரைக்கும் அவளுக்குத் தேவையானதை, அவள் கேட்காமலேயே செய்துட்டு இருக்க. இதோட நிறுத்திக்கடா. திரும்ப அவள்கிட்ட பேசறதெல்லாம்… வேண்டாம்டா” என்றான்.
சற்றுநேரம் அமைதியாக இருந்த பிரபு, “நல்லா யோசிச்சித்தான் இந்த முடிவெடுத்திருக்கேன் சூரஜ்! இதுக்கு மேல நான் அவளுக்கு எதுவும் செய்யப் போறதில்ல. அதுக்கு பதிலா, அவளை செட்டில் பண்ணி விட்டுடணும்னு நினைக்கிறேன்…” என்றான்.
அவனது குரலில் தெரிந்த உறுதியைக் கண்ட சூரஜிற்குக் கவலையாக இருந்தது.
“இதுவரைக்கும் சஹானாவுக்கு எதுவும் தெரியாது. அதனால உன் லைஃப் ஸ்மூத்தா போய்ட்டிருக்கு… அவளுக்கு விஷயம் தெரிஞ்சா, தாங்குவாளாடா?” சற்று கோபத்துடனேயே கேட்டான்.
தலையை அழுந்தக் கோதியவன், “சஹானாவுக்கு எல்லாமே தெரியும்” என்றான்.
இப்போது திகைப்பது சூரஜின் முறையானது.
“எல்லாம் தெரிஞ்சும் நார்மலா…” அவனால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.
“அவளை அவ்வளவு ஈஸியா நினைச்சிட்டியா நீ?” என்று கசப்புடன் புன்னகைத்தான்.
பிரபு வெளிப்படையாக எதையும் சொல்லாவிட்டாலும், சூரஜ்ஜால் ஓரளாவிற்கு நிலைமையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அவனையே வெறித்துப் பார்த்தவன், “அவ்வளவு நடந்தும், நீ இந்த முடிவெடுத்திருக்கன்னா… உனக்கு நெஞ்சு தைரியம் ஜாஸ்திதான். இதுக்கு மேல உன் தலையெழுத்து. இனி இதைப் பத்தி உன்கிட்ட பேசறதே வேஸ்ட்…” என்றான்.

No comments:
Post a Comment