அத்தியாயம் - 63
“என்னது ஊருக்குப் போகணுமா?” வியப்புடன் கேட்டார் பரிமளம்.
“என்ன சஹி? ஒரு மாசம் இருக்கப் போறேன்னு சொன்ன… இருபது நாள் ஓடிப்போச்சு. இன்னும் பத்துநாள் தானே…” என்ற அன்னையிடம், என்ன சொல்வதெனத் தெரியாமல் பார்த்தாள்.
“புரிஞ்சிக்கங்கம்மா! ப்ளீஸ்” என்றாள்.
“என்னடி காலங்கார்த்தால வந்து இப்படிப் பேசற… போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு…” பரிமளம் எரிச்சலுடன் சொன்னார்.
“ரெண்டு நாளா கெட்டகெட்ட கனவா வருது…” மெதுவாக முனகியவள், “நான் வீட்டுக்குக் கிளம்பறேம்மா…” என்றாள் பிடிவாதமாக.
சிரிப்பை அடக்கிக் கொண்டு பார்த்தார் சுகுணா.
“சரி அப்பா எழுந்ததும் நாளைக்கு ட்ரெயினுக்கு டிக்கெட் கிடைக்குதான்னு பார்க்கச் சொல்லலாம்…” என்றார்.
“அதுசரி, இன்னும் பத்துநாள் கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள ஓடிப் போயிடும். அவதான் புரியாம பேசறான்னா நீ வேற…” அதட்டலுடன் சொன்னார் பரிமளம்.
“ஆஹ்! அத்தை கொஞ்சம் சும்மா இருக்கீங்களா! நான் வீட்டுக்குக் கிளம்பறேன்னா கிளம்பறேன். அவ்வளவுதான்…” என்றவள் வீராப்புடன் அங்கிருந்து செல்ல, பரிமளம் முகவாயில் கையை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீராமின் தட்டில் முறுகலான தோசையை வைத்து, சட்னியை ஊற்றினாள் சஹானா.
“போதும்மா!” என்றவன் வாடியிருந்த தங்கையின் முகத்தைப் பார்த்ததும், “ஏன் டல்லாயிருக்க?” என்றான்.
“அதெல்லாம் எதுவும் இல்லண்ணா!” என்று ஆரம்பித்தவளை இடைவெட்டினாள் வர்ஷா.
“அவளுக்கு அவள் வீட்டுக்காரர் கண்ணுக்குள்ளேயே நிக்கிறாராம். வீட்டுக்குப் போகணும்னு காலைலயே அப்ளிகேஷன் போட்டுட்டா… இன்னும் சேங்ஷன் தான் ஆகாம பெண்டிங்ல நிக்குது” - வர்ஷா.
“அதுல என்ன தப்பிருக்கு? அவளோட வீட்டுக்குப் போகணுங்கறா. நியாயமா நீங்கள்ளாம் சந்தோஷப்படணும். ஆமா, அதனால உனக்கென்ன பிரச்சனை என்று பெரிய தங்கையைக் கேட்டான்.
“எனக்கென்ன பிரச்சனை? இன்னும் பத்து நாள் தானே… பேர் வைக்கிற பங்ஷன் முடிச்சிட்டுக் கிளம்பலாமில்ல…” என்றாள் தாங்கலுடன்.
வர்ஷாவின் அருகில் அமர்ந்திருந்த பிரபாகர், “அதெல்லாம் சும்மாடா! சஹிதானே முழுநேரமும் குழந்தையைப் பார்த்துக்கறா. அவள் வீட்டுக்குப் போய்ட்டா, இவள்தானே அதையெல்லாம் செய்யணும்…” என்று பிரபாகர் மனைவியை வம்பிழுக்க, அவள் யாரும் பார்க்காதபடி நறுக்கென அவனது கையைக் கிள்ளினாள்.
வேண்டுமென்றே ஆவென அலறியவன், “எங்கே எங்கம்மா… என் தம்பிப் பொண்ணுங்க மாதிரி வருமான்னு ஊரெல்லாம் பெருமை பேசுவாங்க. இவளைப் பாருங்க இத்தனைப் பேருக்கு நடுவுல என்னைக் கிள்றா… என்றான் சப்தமாக.
வர்ஷாவுக்குத் தலையிலடித்துக் கொள்ளவேண்டும் போலிருக்க, கணவனை முறைத்தாள்.
அங்கே வந்த பரிமளத்திடம், “அம்மா! முறைக்கிறா பாருங்க…” என்றான்.
“டேய்! எழுந்து போய் வேலையைப் பாருடா! நீ என்னைக்கு வேலையில் ஜாயின் பண்ணணும்?” என்று அதட்டலாகக் கேட்டார்.
“ஹுக்கும்! ஊருக்குக் கிளம்பறேன்னு சொல்ற பொண்ணை அனுப்பாதீங்க. என்னை வந்து மிரட்டுங்க. இந்த வீட்ல மாமியாரும், மருமகளும் கூட்டணி போட்டு ஆடுற ஆட்டம் கொஞ்சநஞ்சமில்ல…” என்றபடி எழுந்து செல்ல, சஹானா மெல்ல புன்னகைத்துக் கொண்டாள்.
“ஏன் சஹி! இன்னும் ஊருக்குப் போறதில உறுதியா இருக்கியா? வீண் அலைச்சல் தானே உனக்கு…” – பாசத்துடன் கூறினார் பரிமளம்.
“அதைப்பத்தி அவளே கவலைப்படல. நீங்கள்லாம் எதுக்கு இப்படிப் பேசிட்டு இருக்கீங்க?” என்ற கணேசன், “சஹிம்மா! அப்பா இன்னைக்கு டிக்கெட்டுக்கு ஏதாவது ஏற்பாடு பண்றேன். சரியா… நீ சாப்பிடும்மா” என்றார் கணேசன்.
அலுவலகத்திற்குச் செல்ல தயாராகி வந்த ஸ்ரீராம், “சஹி! வொர்ரி பண்ணிக்காதே… நானும் டிக்கெட்டுக்கு ட்ரை பண்றேன் ஓகேயா…” என்றான்.
அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கே வந்த வர்ஷா, “ரெண்டு பேரும் என்ன இரகசியம் பேசறீங்க?” ஆர்வத்துடன் கேட்டாள்.
“அதான் இரகசியம்னு தெரியுதில்ல…. அப்புறமென்ன கேள்வி” என்றபடி அலுவலகத்திற்குக் கிளம்பினான்.
“ஹும்! கிளம்பறதுன்னு முடிவு பண்ணிட்ட… ஓகே போய்ட்டு பங்ஷனுக்கு வந்திடுவயில்ல…” எனக் கேட்டாள்.
அவள், “அக்கா!” என்று உரிமையுடன் கோபித்துக் கொள்ள, “சும்மா சொன்னேன்ப்பா!” என்று தங்கையை சமாதானப்படுத்தினாள் வர்ஷா.
பத்துமணி வாக்கில் அலுவலகத்திலிருந்து போன் செய்த ஸ்ரீராம், “சஹி! பதினோரு மணிக்கெல்லாம் ரெடியாகிடு. நான் வந்ததும் பத்து நிமிஷத்தில் கிளம்பணும். இப்போ போனை அம்மாகிட்ட கொடு…” என்றான்.
அதுவரை மனத்தைத் தாக்கிய எண்ணங்களுடன் போராடிக்கொண்டிருந்தவள், விடுவிடுவென ஆயத்தமானாள்.
சொன்னதைப் போலவே வந்த ஸ்ரீராம், தங்கையை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
காரில் ஏறியதும், “எத்தனை மணிக்குண்ணா ட்ரெயின்…?” என்றாள்.
“ட்ரெயினா… இந்த நேரத்துல ஏது ட்ரெயின்? அதுவும் எல்லாம் ஃபுல். ப்ளைட்ல டிக்கெட் போட்டிருக்கேன்…” என்றான் சிரிப்புடன்.
அவளுக்குப் பேச்சே எழவில்லை. “தேங்க்ஸ்ண்ணா! என்னாலதான்…” என்று ஆரம்பித்தவளை, “ஹேய்! போதும் விடு… உனக்கு வீட்டுக்குப் போகணும், பிரபுவைப் பார்க்கணும். அதுக்கு என்னால முடிஞ்சது…” என்று புன்னகைத்தான்.
பூரிப்பில் திளைத்துக் கொண்டிருந்தாள் அவள். இத்தனை அற்புதமான சொந்தங்களைத் தனக்களித்த இறைவனுக்கு மனதார நன்றி கூறினாள்.
கிளம்பும் நேரம், “சஹி! உனக்குச் சொல்லத்தேவையில்ல… இருந்தாலும்” என்று சற்று தயங்கியவன், “பிரபு ஏதாவது ரியாக்ட் பண்ணாலும், நிச்சயம் பண்ணுவான். நீதான்… பார்த்துக்க…” என்ற தமையனிடம் தலையசைத்து புன்னகையுடன் விடைபெற்றாள்.
************
‘தன்னை எந்த அளவிற்கு முட்டாளாக்கி இருக்கிறாள் இவள்…’ என்று ஜோஷிதாவின் மீது ஆத்திரமாக வந்தது.
கூடவே, தன்னிடம் எதைப் பற்றியும் பேசாமல், தானாக முடிவெடுத்து தன்னைவிட்டுப் பிடிந்து சென்ற மனைவியின் மீது அளவுக்கதிகமான கோபத்தில் இருந்தான்.
இருவருமே தனது இணையின் எண்ணங்களை சொல்லாமலேயே அறிந்திருந்தாலும், தான் எதிர்பார்க்கும் நேரத்தில் தோள் சாய அந்தத் துணை அருகில் இல்லாவிடில், அங்கே அவர்களது ஈகோ தலைதூக்கத்தான் செய்யும்.
இப்போது பிரபுவும் அதே நிலையிலேயே இருந்தான்.
அவனது மனம் தனது உள்ளம் கவர்ந்தவளது ஆறுதலையும், அரவணைப்பையும் எதிர்பார்த்தது. அவளது கரத்தைப் பிடித்தபடி அமர்ந்திருக்கத் துடித்தது.
ஆனால், அதெல்லாம் இப்போது சாத்தியமில்லை என்று உணர்ந்ததுமே… அவள் மீதான கோபமாக உருமாறியது.
காரை அறைந்து மூடிவிட்டு இறங்கியவன், போனில் யாரிடமோ பேசிக்கொண்டே வீட்டினுள்ளே நுழைந்தான். ஹாலில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கூடக் கவனிக்காமல், விடுவிடுவென தங்களது அறையை நோக்கி நடந்தான்.
தன்னைக் கண்டதும் கணவன் வெளிப்படுத்தப் போகும் உணர்வுகளைக் காண ஆவலாகயிருந்த சஹானாவிற்கு ஏமாற்றமாக இருந்தது.
அவன் சென்ற வழியைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தவளை, பெரியவர்கள் இருவரும் பார்த்தனர்.
கண்ணாலேயே மனைவிக்கு ஜாடை காட்டிய புருஷோத்தமன், அங்கிருந்து எழுந்து சென்றார்.
“தேவி! நீ பியூட்டி பார்லர் போகணும்னு சொன்னியே… கிளம்பலையா?” என்ற கௌரி, கிளம்பு என்பதைப் போல மகளுக்குச் ஜாடை காட்டினார்.
“ஆ…ஆமாம்மா! கிளம்பறேன்…” என்றவள் சிரிப்பை அடக்கிக் கொண்டே எழுந்து சென்றாள்.
மகளின் சிரிப்பைப் பார்த்து முறைத்த கௌரியம்மா, மருமகளின் பக்கமாகத் திரும்பினார்.
“சஹி! நானும், மாமாவும் வாக் போய்ட்டு ஒன் ஹவர்ல வந்திடுறோம்…” என்றார்.
“ம்ம்…” என்று தலையசைத்தவள், தயக்கத்தோடே சிறிதுநேரம் அமர்ந்திருந்தாள்.
அவனது முகத்தைப் பார்த்தே ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்டவளுக்கு, நிச்சயமாக அதற்குக் காரணம் ஜோஷிதாவாகத்தான் இருக்கும் என்று புரிந்தது.
‘கடவுளே! அவர் எதிரில் போய் நின்று பேச நீதான் எனக்குத் தைரியத்தையும், பலத்தையும் கொடுக்க வேண்டும்…’ மானசீகமாகக் கடவுளை வேண்டியபடி காஃபியை ஃபிளாஸ்கில் ஊற்றினாள்.
மெல்ல அறைக்கதவைத் திறந்தவள், உள்ளே சென்றதும் சப்தமில்லாமல் மூடினாள்.
அங்கே தங்களது திருமண புகைப்படத்தை பார்த்தபடி நின்றிருந்ததைக் கண்டதும் அவளுக்கு உருகிப் போயிற்று. ஓசையெழுப்பாமல் காஃபி ட்ரேயை டேபிள் மீது வைத்தவள் அவனருகில் சென்றாள்.
“ஏன் சின்னு என்னை விட்டுட்டுப் போய்ட்ட? நீ என் பக்கத்திலிருந்தாகூட போதும்டீ… அந்த நிம்மதியோட உன் முகத்தைப் பார்த்துகிட்டே இருந்திருப்பேனே… என்னைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போய்ட்டயில்ல…
நான் இப்படி உன்னை நினைச்சி புலம்பறது தான் உனக்குச் சந்தோஷமா?”
மெல்லிய குரலில் அவன் புலம்புவதைக் கேட்டதும், தன்னிலை மறந்து போனாள்.
பனித்த விழிகளுடன், “பிரபு!” என்றழைத்தபடி பின்னாலிருந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
கண்ணீர் அவனது சட்டையை நனைக்க, அவனுக்குள் புதைந்துவிடுவதைப் போல மேலும் அவனை இறுக்கி அணைத்தாள்.
அவள் அணைத்ததும், தளர்ந்த நிலையில் நின்றிருந்த பிரபுவின் உடல் சட்டென சிலிர்த்து இறுகியது.
வேகமாக அவளது கரத்தைப் பிரித்து, முன்பக்கமாக இழுத்தான்.
கண்ணீரும், சிரிப்புமாக தன்னைப் பார்த்தவளாது தோள்களைப் பிடித்து, “எங்கேடி வந்த? நான் நல்லா இருக்கேனா? பைத்தியமா திரியறேனான்னு பார்க்க வந்தியா?” என்று சீறினான்.
தன்னைக் கண்டதும் பெரிதாக எந்த உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளா விட்டாலும், நிச்சயமாக நிம்மதியுடன் சிறு புன்னகையாவது சிந்துவான் என்று எதிர்பார்த்திருக்க, அவனது இந்த ஆவேசம் அவளுக்குத் திகைப்பூட்டியது.
விரிந்த கண்களால் நம்பமுடியாமல் பார்த்தாள்.
“என்னடி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம… முறைச்சி பார்த்துட்டு இருக்க…” மீண்டும் எகிறினான்.
“இல்ல… பிரபு! நான்…” என ஆரம்பித்தவளை, “போதும். உன் இஷ்டத்துக்கு முடிவெடுத்து நீயே எல்லாத்தையும் நடத்திக்கறதுக்கு நான் எதுக்கு ஒருத்தன்… நீ இந்த வீட்லயே இரு. ஆனா, இந்த வீட்டோட மருமகளா மட்டும்தான். என்னோட மனைவியா இல்ல…”
கோபத்துடன் அவன் சொன்ன வார்த்தைகள், அவளது இதயத்தைத் தைத்தது.
“நம்ம நல்லதுக்காகத்தான் செய்தேன். அதைப் போய்…” பேசமுடியாமல் அவளது தொண்டை அடைத்தது.
“வேண்டாம் தாயே! இன்னைக்கு உன் மூடு நல்லாயிருக்கு… நீ என்னை நெருங்கி வருவ. ராத்திரியே உனக்கு ஏதாவது தோணும்… என்னை அப்படியே ஒதுக்கித் தள்ளிடுவ. நானும் சாதாரண மனுஷன்தானே…”
இனி எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணி வந்த தனக்கு, இப்படி ஒரு இடி காத்திருக்கிறது என்று தெரியாமல் போனதே… என்று வேதனையாக இருந்தது.
தனது சுயநலத்திற்காக, அவனைத் தானும் பாடாய்படுத்தியதை இப்போதுதான் உணர்கிறாள். என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அவனது தவறின் ஆழம் புரியவேண்டும் என்று முனைந்தேனே தவிர, இதனால் அவனது மனம் என்ன காயப்படும் என்று ஏன் எனக்குத் தோன்றாமல் போனது என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.
மனத்தின் பலவீனம் உடலில் தெரிய, அருகிலிருந்த சோஃபாவில் அமர்ந்தாள். கண்ணீர் சுரப்பியே வறண்டு விட்டதோ என்று நினைக்கும்படிக்கு விழியிலிருந்து ஒரு துளி கண்ணீர்கூட வரவில்லை.
தன்னைத் தேற்றிக் கொண்டு நிமிர்ந்தவள் ப்ரீஃப்கேஸுக்கு அருகிலிருந்த வெள்ளைநிற பிளாஸ்டிக் கவரிலிருந்த முல்லைச் சரத்தைக் கண்டதும், வியப்பில் அவளது விழிகள் விரிந்தன.
விழிகளை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள். அவனோ, அவளுக்கு எதிர்புறமாகத் திரும்பி அமர்ந்திருந்தான்.
அதுவரையிருந்த கவலையெல்லாம் மறைந்து, வழக்கமான குறும்புத்தனம் தலைதூக்கியது.
‘திருட்டு ராஸ்கல்!’ என்று மனத்திற்குள் அவனைக் கொஞ்சிக் கொண்டாள்.
‘நடத்துங்க நடத்துங்க… எவ்வளோ நேரத்துக்கு நீங்களும் இப்படியே இருக்கீங்கன்னு பார்க்கறேன்…’ மனத்திற்குள் நினைத்துக் கொண்டே எழுந்தாள்.
“அப்போ உங்க முடிவு இதானா?” என்றாள் பரிதாபமாக.
கழுத்தை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தவன், “இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் புரியலையா?” என்று சிடுசிடுத்தான்.
பெருமூச்சை வெளியிட்டவள், “அப்போ நானும் இதுக்கு சம்மதிக்கிறேன்…” என்றவள் அங்கே நில்லாமல் வேகமாக வெளியேற, பிரபு படாரென எழுந்தான்.
‘அடக்கடவுளே! என்னாச்சு இவளுக்கு? ஒரு பேச்சுக்குச் சொன்னா, சரின்னுட்டு போறா…’ நினைத்துக் கொண்டே அறையிலிருந்து எட்டிப் பார்த்தான்.
அம்மாவும், அப்பாவும் அப்போதுதான் வீட்டினுள் நுழைவது தெரிந்தது. தேவியும் வீட்டில் இல்லாததை கவனித்தான்.
‘எங்களைத் தனியா விட்டுட்டு எல்லோரும் வெளியே போய்ட்டாங்களா… அடராமா! நல்ல சான்ஸை இப்படிப் பேசிப் பேசி மிஸ் பண்ணிட்டியே பிரபு!’ என்று திட்டிக் கொண்டான்.
சஹானா சமையலறைக்கும், டைனிங்கிற்கும் நடந்துகொண்டிருக்க, இன்னமும் உடையைக் கூட மாற்றாமல் இறங்கிவந்த மகனை கேள்வியுடன் பார்த்தார் கௌரி.
‘இப்போ என்னடா குழப்பம் செய்து வச்சிருக்க?’ அவரது தாய் மனம் பார்வையாலேயே கேள்வி கேட்டது.
அவரது கேள்வி அவனுக்குப் புரிந்ததோ என்னவோ… அசட்டுச் சிரிப்புடன், “வெளியே போய்ட்டு வரீங்களாம்மா…” என்றான்.
அவரோ பதில் சொல்லாமல் சமையலறையையும், அவனையும் மாறி மாறிப் பார்த்தார்.
அவன் கனகச்சிதமாக அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
இரவு உணவு முடிந்து அரைமணி நேரமாகியும், சஹானா அறைக்கு வராததால் அறையிலிருந்தபடி அவளை அழைத்தான்.
“அண்ணி கிச்சன்ல இருக்காங்கண்ணா!” என்றாள் தேவி.
“நீ என்ன செய்ற?”
“டீவி பார்த்துட்டு இருக்கேன்…” என்று குரல் கொடுத்தாள்.
“போய் நீயும் சமையல் கத்துக்கோ… கல்யாணமாகி நாளைக்குப் புருஷன் வீட்டுக்குப் போனா என்ன பண்ணுவ?” என்ற அண்ணனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“ஹலோ! அந்தக் கவலை உங்களுக்கு வேணாம். அண்ணியை கூப்பிடணும்னா போய்க் கூப்பிடுங்க…” என்றவள் மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்க, அவன் சமையலறை வாயிலில் வந்து நின்றான்.
அவனைக் கண்டதும் மென்குரலில், “சஹானாம்மா! சின்னவர் வந்திருக்கார்” என்ற வேலையாள் அங்கிருந்து விலகிச் செல்ல, சஹானா திரும்பிப் பார்த்தாள்.
“ஏதாவது வேணுமா…?” என்று கேட்டாள்.
“அது… மேலே காஃபி கப் அப்படியே இருக்கு. எடுத்துட்டு வரலையா?” எரிச்சலுடன் கேட்பதைப் போலக் கேட்டான்.
உதட்டை மெல்லக் கடித்தவள், மைரோவேவ் அவனிலிருந்த பாலை எடுத்து கண்ணாடி டம்ளர்களில் ஊற்றியபடி, “அப்பவே எடுத்துட்டு வந்துட்டேன்…” என்றாள்.
“எ…ப்போ?”
நீங்க டீவி பார்த்துட்டு இருந்தீங்களே அப்போ…” என்றாள்.
“ஓ!” என்றவன், அவள் எடுத்து வந்ததைக் கவனிக்காமல் கேள்வி கேட்ட தன்னையே, மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான்.
சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் ட்ரேயுடன் அங்கிருந்து நகர, அதேநேரம் கௌரி சமையலறைக்குள் நுழைந்தார்.
மருமகளையும், அவளுக்குப் பின்னாலேயே வந்த மகனையும் வியப்புடன் பார்த்தார்.
சஹானாவிடம், “என்னம்மா?” என்றார்.
“உங்க மகன்கிட்டயே கேளுங்கத்தை!” என்றவள் வேகமாக வெளியே சென்றாள்.
“என்னடா பிரபு…?” என்ற அன்னையிடம், “ஒண்ணுமில்லம்மா! பால் எடுத்துக்க வந்தேன்…” என்று மழுப்பலாகச் சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தான்.
‘உன்னைத் தெரியாதாடா எனக்கு’ என்று நினைத்துச் சிரித்துக் கொண்டார் கௌரி.
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
‘நான் வந்தே பத்து நிமிஷமாகுது. இவள் இன்னும் மேலே வரலை…’ நச்சரித்த மனத்தையும், தனது ஆவலையும் அடக்க முடியாமல் தவித்தான்.
“வாயை வச்சிட்டு சும்மா இல்லாம… உளறிக் கொட்டி… ஏதாவது கேட்டா என்ன டயலாக் பேசப்போறாளோ! உன்னையே இப்படிப் புலம்ப வச்சிட்டாளேடா பிரபு!” என்று அவன் முணுமுணுத்துக் கொண்டிருக்க, சஹானா அறைக்குள் வந்தாள்.
அவளைக் கண்டதும் தாறுமாறாகத் துடித்த இதயத்தை, கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.
‘சே! இதென்ன விடலைப் பையன் மாதிரி… காதல் எப்படியெல்லாம் பாடாய்படுத்துது. இந்த ராட்சஷி என்ன அட்டகாசம் பண்ணப்போறாளோ…’ என நினைத்துக் கொண்டே பார்த்தான்.
வந்தவள் நிதானமான நடையுடன் அவளிருந்த அறையை நோக்கி நடக்க, இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“சஹானா! எங்கே போற?” போலியான அதட்டலுடன் கேட்டான்.
“ரொம்ப டயர்டாயிருக்கு தூங்கப்போறேன். ஏன்? உங்களுக்கு ஏதாவது வேணுமா…”
‘இங்கே ஒருத்தன் புலம்பிட்டு இருக்கேன் உனக்குத் தூக்கமா வருது…’ கடுகடுவென வந்தாலும், இப்போது அதெல்லாம் வேலைக்காகாது என்று புரிய, அவளையே பார்த்தான்.
ஏதோ விட்டுக்கொடுப்பதைப் போல, “பரவாயில்ல… இங்கேயே தூங்கு…” என்றான்.
“வேணாம். நாம ஒரே இடத்துலயிருந்தா ரெண்டு பேருக்குமே சங்கடம்…”
இப்போது அவனுக்குத் தான் தர்மசங்கடமாக இருந்தது.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…” விட்டேத்தியாகச் சொல்வதைப் போலச் சொன்னான்.
“என்னைக் கம்பல் பண்ணாதீங்க…” என்றவள் அறையை நோக்கி நடக்க, “நான் சொல்லிட்டேயிருக்கேன்… என் பேச்சுக்கு என்ன மரியாதை?” என்றவன் அவளது இடையைப் பற்றி இழுத்தான்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் வேகமாக அவன் மீது மோத, அவனுக்கும் சமநிலை தவற, இருவரும் அருகிலிருந்த சோஃபாவில் விழுந்தனர்.
கணவனின் நெஞ்சில் புதைந்திருந்த முகத்தை உயர்த்தி அவனது கண்களைப் பார்த்தாள் சஹானா.
இருவருக்குமிடையிலிருந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிவிற்கு வர, அங்கே ஒரு அழகான காதல் உயிர்பெற்றுக் கொண்டிருந்தது.
நேசத்தை அவனது கண்கள் வெளிப்படுத்த, கைகள் அவளது இடையை இறுக்கி அணைத்து தனது உரிமையை நிலைநாட்டியது.
“ஹலோ! பேச்சு ஒண்ணு, செய்கை ஒண்ணாயிருக்கு!” என்று அவனைச் சீண்டினாள்.
“இங்கே மட்டும் என்னவாம்! நடக்கவே நடக்காதது மாதிரி பேசிட்டு, இப்போ ஒய்யாரமா என் மேல் சாய்ஞ்சி பேசிட்டிருக்க…” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் சட்டென விலக முயன்றவளை, மீண்டும் இழுத்து அணைத்தான்.
“ஐ லவ் யூ சின்னு!” ஆழ்ந்த குரலில் ஒலித்த வார்த்தைகள், அவளது இதயத்தை ஊடுறுவியது.
விழிகள் ஈரமாக அவனது நெஞ்சில் சாய்ந்தவள், “சாரி பிரபு!” என்றாள்.
அவளது நெற்றியில் முத்தமிட்டவன், “உன்கிட்ட கொஞ்சம் மனசுவிட்டுப் பேசணும் சஹி…!” என்றதும் இருவரும் எழுந்து அமர்ந்தனர்.
அவளது கரத்துடன் தனது கரத்தைக் கோர்த்துக் கொண்டவன், “இனி நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் கிடையாது. உனக்குத் தெரியாம நான் எதையும் செய்ய மாட்டேன். அதேபோல நீயும் தயவு செய்து என்கிட்டப் பேசாம, எந்த முடிவையும் எடுத்திடாதே. ப்ளீஸ்!” என்றான்.
அதை உணர்ந்தவளாக, “ஒருவகைல நான் செய்தது தப்புத்தான். ஆனா, அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியல. நிச்சயமா இதை நான் சொல்லியிருந்தா நீங்க ஏத்துட்டு இருப்பீங்களா?” எனக் கேட்டாள்.
“கண்டிப்பா மாட்டேன்…”
“அதனாலதான் அப்படிச் செய்ய வேண்டியதா போச்சு. நான் மட்டும் சந்தோஷமா இருந்திருப்பேன்னு நினைக்கறீங்களா?”
“ஹேய்! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? இதுவரைக்கும் நீ செய்த எல்லாமே என்னோட நல்லதுக்காக, நம்மோட சந்தோஷத்துக்காக. அப்போ புரியலைனாலும், இப்போ நல்லாவே புரியுது” என்றான்.
“புரிஞ்சதால தானே என்னை இந்த வீட்டுக்கு மருமகளா மட்டும் இருக்கச் சொன்னீங்க…” அவன் சொன்ன வார்த்தைகளை அவனிடமே கேட்டாள்.
அவனும் சற்று சகஜமாக, “அப்படிப் பேசினா… நீ சண்டைக்கு வருவ. உன்னைக் கலாட்டா பண்ணலாம்னு, நினைச்சி சொன்னேன். நீ என்னடான்னா… சேம் சைட் கோல் போட்டுட்ட…” என்று சிரித்தான்.
“பின்னே, கவர் நிறைய எனக்குப் பிடிச்ச பூவை வாங்கி வச்சிகிட்டு இந்தப் பேச்சு பேசினா என்ன செய்யறதாம்!” என்று அவனது தோளோடு உரசினாள்.
“அடடா! நீ பார்த்துட்டியா…” பூவை எடுத்துவந்து அவளிடம் கொடுக்க, ஆசையுடன் வாங்கித் தலையில் சூட்டிக் கொண்டாள்.
அவளருகில் நெருங்கி அமர்ந்து வாசனையை நுகர்ந்தவன், அவளது காதுமடலை மூக்கால் உரசினான்.
கூச்சத்துடன் விலகியவள், “ம், பேசணும்னு சொல்லிட்டு கதை எங்கெங்கேயோ போகுது…” என்றாள்.
“ம்ம், இதுக்கு மேல என்ன பேசணும்? எல்லாம் முடிஞ்சி போச்சு. உனக்குக் கிளியர் பண்றதுக்கு வேணா எல்லாத்தையும் சொல்றேன்” என்றவன் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவளிடம் கூறினான்.
கண்களை அழுந்த மூடித் திறந்தவள், “ஒரு வகையில அவளும் பாவம் இல்ல. அவள் நல்லவ இல்லனாலும், மோசமானவ இல்ல…” என்றவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.
“இந்தப் பொண்ணுங்களைப் புரிஞ்சிக்கறதே கஷ்டம்ப்பா!” என்றவன், “உன்னை அவள் எப்படியெல்லாம் பேசியிருக்கா… என்கிட்டயே நீ அவளை மிரட்டினன்னு சொல்றா… நீ என்னடான்னா அவளுக்கு சப்போர்ட் பண்ற…” எரிச்சலுடன் சொன்னவன், “நீ சொன்னது போல அன்னைக்கே என்னை ரெண்டு அறை விட்டிருந்தா நானும் இப்படி ஆகியிருக்கமாட்டேன் இல்ல” எனக் கேட்டான்.
“ஹப்பா… போதும் விட்றலாம். முடிஞ்ச கதையைத் திரும்ப ஆரம்பிக்க வேணாம். மணி பதினொன்னு எனக்குத் தூக்கம் வருது” என்றவள் எழ, சட்டென அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.
“ஆஹ்வ்…!” என்று கத்தியவள், “ஹய்யோ! நாலடி நடந்து வரமாட்டேனா? விடுங்க என்னை…”
“ம், பெட்ல கொண்டு வந்து விட்டதும் எனக்குக் கதை சொல்லு. நல்லா வெயிட் போட்டுட்டடி பொண்டாட்டி…”
“ஹய்யோ போதுமே…” வெட்கத்துடன் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
ஏதோ நினைவு வந்தவளாக, அவனைத் தள்ளிவிட்டுவிட்டு எழுந்தமர்ந்தாள்.
“ஆமாம்… உங்களை யாரு அண்ணன்கிட்ட எல்லாத்தையும் சொல்லச் சொன்னது?” என்றதும், “அதனால என்ன இப்போ…? நம்ம ஸ்ரீ தானே” என்றான்.
“அண்ணாகிட்ட சொல்ற அளவுக்கு, ரொம்ப முக்கியமான விஷயமா இது! நம்ம விஷயம் நம்மோட இருக்கட்டும். எது எல்லோருக்கும் தெரியணுமோ, அது மட்டும் தெரிஞ்சா போதும். எங்க அண்ணன் உங்களைப் புரிஞ்சிகிட்டு நல்லவிதமா எடுத்துகிட்டதால எந்தப் பாதகமும் இல்லாம போச்சு. இதுவே எதிர் மறையாகியிருந்தா...?”
அவளது குரலில் கோபமும், ஆதங்கமும் போட்டி போட்டது.
“மனசு கேட்கல சஹி! உங்களோட பாசத்தைப் பார்த்து நான் வியந்திருக்கேன். கொஞ்ச நாளே பழகியிருந்தாலும், அவனோட அந்த நட்பை ஆத்மார்த்தமா உணர்ந்திருக்கேன். என் மேல நம்பிக்கை வச்சிருக்கவனை என்னால ஏமாத்தமுடியல… பெரியவங்ககிட்ட சொல்லத் தைரியமில்ல… அதனால அவன்கிட்ட மனசுவிட்டுச் சொல்லிட்டேன்” என்றவனை ஆறுதலுடன் பார்த்தாள்.
சட்டென சிரித்தவன், “இதைச் சொல்றியே… நான் எப்படிப் பூ வாங்கிட்டு வந்தேன்னு சொல்லு பார்ப்போம்?” என்றதும்தான் அவளுக்கு, ‘இதை யோசிக்கவே இல்லையே!’ என்று தோன்றியது.
“அ..அண்ணனா…!” என அவள் கேட்டதும், அவன் வாய்விட்டுச் நகைத்தான்.
“எப்போ…” என்றாள்.
“உன்மேல செம கடுப்போட தான் கிளம்பி வந்தேன். அப்போதான் ஸ்ரீ போன் செய்தான். எனக்காக நீ வர்றன்னு தெரிஞ்சதுமே… என் கோபமெல்லாம் ஓடிப்போச்சு. நீ ஹால்ல உட்கார்ந்திருக்கறதை பார்த்தேன். உன்னைக் கொஞ்சம் வம்பிழுக்கலாம்னு தான் அப்படிப் பேசினேன்…” என்றான்.
“உங்களை…” என்று பற்களைக் கடித்துக்கொண்டு சொல்ல, “நாலு அடி வேணாலும் அடிச்சிக்கோ… ஆனா, கையால இல்ல…” என்று உதட்டைக் குவித்துக் காண்பிக்க, அவள் கடுப்பாகிவிட்டாள்.
“எதிலேயுமே கொஞ்சங்கூட சீரியஸ்னஸ்ஸே கிடையாது. எல்லாத்துலயும் விளையாட்டு.”
“உங்கிட்ட விளையாடாம, யார்கிட்ட சின்னு விளையாடுவேன்” என்று அவளது இடையைக் கிள்ளினான்.
“பெரிய தொல்லையாப் போச்சு உங்ககிட்ட. பேசாம தூங்கப் போறீங்களா இல்லையா!” என்றாள் மிரட்டலாக.
“பேசாம வேணா இருக்கேன். ஆனா, தூங்க மாட்டேனே…” என்று, அவளது முகத்தை நெருங்கினான்.
அவன் கொடுத்த பரிசை முழுமனத்துடன் வாங்கிக் கொண்டவள், அதை வட்டியும் முதலுமாக அவனுக்குத் திருப்பிக் கொடுத்தாள்.
நாணத்துடன் தன் மீது சாய்ந்தவளது முகத்தை உயர்த்தியவன், அன்போடு பார்த்தான்.
‘காதல், பாசம், அன்பு, அக்கறை, அரவணைப்பு என்று அனைத்தையும் கற்றுக்கொடுத்தவளை என்றும் இதே மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று சபதம் எடுத்துக் கொண்டான்.
வாழ்க்கை என்பது வாழ்த்தான். அதை நேர்மையாகவும், செம்மையாகவும் வாழவேண்டும் என்ற வைராக்கியத்துடன், தன்னை நெறிப்படுத்திய மனைவியை பெருமிதத்துடன் பார்த்தான்.
“எதுக்கு இப்படி வச்ச கண்ணை வாங்காம பார்க்கறீங்க?”
“ஒரு பொண்ணு மனைவியா மட்டுமில்ல, கணவனுக்கு நல்ல தோழியாவும் இருக்க முடியும்னு நிரூபிச்சிட்ட. நீ என்னோட சஹி மட்டும் இல்ல… சகியும் கூட…”
நேசத்துடன் உரைத்தவனை, அவள் காதலுடன் பார்த்தாள்.
புரிதலும், அரவணைப்பும் கொண்ட அவர்களது இல்லறத்தைக் கண்டு மேலும் இன்புற, எதிர்காலம் ஆவலுடன் காத்திருந்தது.

No comments:
Post a Comment