Wednesday, June 24, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம்– 7
உங்க வைஃப் பேரு சஹானாதானே?
அவனது நெருங்கி அமர்ந்தபடி கேட்டாள்.
ம்.”
பேர் ரொம்ப அழகா இருக்கு. ஆளும் அழகா இருப்பாங்களா?”
ம்ச்சு! இப்போ எதுக்கு அவளை ஞாபகப்படுத்தற?” எரிச்சலுடன் கேட்டான்.
இமைகள் படபடக்க, அவனது முகத்தைப் பார்த்தாள்.
ஏன்? என் பிரபுவோட மனைவி எப்படி இருப்பாங்கன்னு நான் தெரிஞ்சிக்க ஆசைப் படக்கூடாதா?”
ஆயாசத்துடன் நிமிர்ந்தவன், “எல்லாவிதத்திலும் உன்னைவிடக் குறைவுதான். போதுமா!” என்றவன், அவளை விலக்கி விட்டு எழுந்தான்.
சட்டையை அணிந்தவன், “ஆனா, ஒரு விஷயத்தை ஒத்துக்கணும். நான் எதிர்பார்த்ததைவிட புத்திசாலியா இருக்கா. அவளை நம்பவைக்க என்னவெல்லாம் பேசவேண்டியிருக்கு. நல்லவனா இருக்கறதைவிட, நல்லவனா நடிக்கறது ரொம்ப ரொம்பக் கஷ்டம்.
எல்லாம் எங்க அம்மாவைச் சொல்லணும். மிரட்டி மிரட்டியே காரியத்தை சாதிச்சிகிட்டாங்க. ஆனா, இனி என்ன செய்யமுடியும்? இவளைச் சமாளிக்கறது ஒண்ணும் பெரிய விஷயமில்ல. அதேநேரம் இவளை வச்சே எங்க அம்மாவை மிரட்ட எனக்கு எவ்வளவு நேரமாகும்?”
கேட்டவனது முகம் பயங்கரமாக மாறியது.
பிரபு!” பயமும், கவலையுமாக அவனது கரத்தைப் பிடித்தாள் ஜோஷிதா.
பொறுமையாக இருங்க ப்ளீஸ்! அவசரப்பட்டு எந்தப் பிரச்சனையும் பண்ணாதீங்க. பாவம் பிரபு! அந்தப் பொண்ணு உங்களை நம்பி வந்திருக்கா. நியாயமா நான்தான் உங்ககிட்டயிருந்து விலகியிருக்கணும்…”
அவள் சொல்லி முடிக்கவில்லை. முழுபலத்துடன் அவன் தள்ளிவிட்டதில், மெத்தையின் மீது விழுந்தாள். சுதாரித்து அவள் எழுவதற்குள் வேகமாக அவளை நெருங்கினான்.
இங்க பார், நான் என்ன செய்யணும்னு நான்தான் முடிவு பண்ணணும்; நீ இல்ல. இன்னொரு முறை எனக்கு அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேணாம். புரிஞ்சிதா…” என்று கர்ஜித்தான்.
இதுதான்... இதுதான் என்பிரபு!’
அவனது சுயநலத்தையும் அவள் தனக்கான அங்கீகாரமாக நினைத்து, கண்ணீருடன் புன்னகைத்தாள்.
பிரபுவைப் பற்றி அவள் அறியாதவளில்லை. கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் அவனுடன் பழக்கம். ஆனால், இன்றைக்கு அவனிடம் தெரிந்த கோபமும், வேகமும் இதுவரை அவள் அறியாதது.
ஜோஷிதா, பிரபுவின் நண்பனின் அலுவலகத்தில் பணிபுரிந்தவள். இவன் நண்பனின் அலுவலகத்திற்குச் செல்லும் போதும், சில பிஸினஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட போதும் இருவருக்கும் இடையில் அறிமுகம் ஆனது.
பிரபுவின் பேச்சும், பழகும் விதமும் அவளைக் கவர, அவனை ஒருதலையாகக் காதலிக்க ஆரம்பித்தாள். ஆனால், பிரபுவிற்கு அவளைப் பிடித்திருந்த போதும் அவள்மீது காதலென்று எதுவும் இல்லை.
மீட்டிங்கிலும், நண்பனின் அலுவலகத்திலும் சந்தித்துக் கொண்ட இருவரும் எதேச்சையாக சிலநேரங்களில் வெளியிடங்களில் சந்தித்துக் கொண்டதும் உண்டு. சிலமாதங்களில் சொல்லி வைத்தே இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
பெற்றோர் இல்லாத ஜோஷிதாவிற்கு, பிரபுவின் அருகாமை நிம்மதியையும், பாதுகாப்பையும் கொடுத்தது. அவன் பழகும் விதத்தைப் பார்த்து அவனும் தன்னைக் காதலிப்பதாக நினைத்துக் கொண்டாள்.
பிரபுவைப் பொறுத்தவரையில் காதல், திருமணம் என்பதெல்லாம் சுதந்திரமாகப் பறந்து திரியும் பறவையைக் கூண்டுக்குள் அடைப்பது போன்றது. தனி மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பது.
சம்பாதிக்கவேண்டும்;வாழ்க்கையைஅனுபவிக்கவேண்டும். எந்தச் சுழலிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தான். அதற்காக பிரம்மச்சாரியாக இருக்கவும் தயாராக இல்லை.
யாரும் இல்லாத ஜோஷிதாவை அவனுக்குப் பிடித்திருந்தது. அவளது அழகு, நாசூக்காக பழகும் விதம், அதிலும் தன்னைக் கண்டதும் கண்களில் மையலுடன் பார்ப்பதும் பிடித்திருந்தது.
தன்னுடைய எண்ணத்தைச் சொல்வோம், பிடித்திருந்தால் சேர்ந்திருப்போம்இல்லையென்றால், அவள் வழியிலிருந்து விலகிவிடுவோம்என்று முடிவெடுத்து, தன்னைச் சந்திக்க அவளை வரச் சொன்னான்.
அவளும் பிரத்தியேகமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆவலுடம் அவனைக் காண வந்தாள். ஆனால், அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு, தலையில் இடிவிழுந்ததைப் போலானது.
அவசரமில்ல ஜோ! நல்லா யோசிச்சி பதில் சொல்லு. நான் உன்னைக் கம்பல் பண்ணலஎன்றான்.
ஒருவாரம் அவள் அலுவலகத்திற்கு வரவேயில்லை. இரண்டு நாட்கள் அவளது போனை எதிர்பார்த்தவன், அதன்பிறகு அதைப் பற்றி ஏறக்குறைய மறந்தே போனான்.
ஆனால், அவன் எதிர்பாராத நாளில் அவனைக் காண நேரிலேயே வந்தாள். தனது சம்மதத்தைச் சொன்னாள். பிரபு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், மெலிதாக புன்முறுவல் பூத்தான்.
அவனுக்கு வேண்டுமானால் இது சாதாரணமாக இருக்கலாம். எந்தப் பாதுகாப்பும் இல்லாத ஜோஷிதாவிற்கு, வாழ்க்கை என்பது பெரிய போர்க்களமாகத் தான் இருந்தது. அவளைச் சுற்றியிருந்த உலகத்தில் மனித உருவில் நடமாடிய வல்லூறுகளுக்கும், பருந்துகளுக்கும் இடையில்  சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்.
ஒருவகையில் இன்றைக்கு அவள் எடுத்திருக்கும் முடிவுக்கு, அதுவும் ஒரு காரணம். ஜாடையாகவும், நேரடியாகவும் அவளை வதைத்துக் கொண்டிருந்தவர்கள், பிரபு அவளிடம் பழக ஆரம்பித்த பின்விலகிச் சென்றனர்.
பிரபுவின் வேண்டுகோளும் அதுவாகவே இருந்தபோதும், முடிவெடுக்கும் உரிமையை அவளிடம் கொடுத்திருந்தான். வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ள பணமும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள துணையும் அவளுக்கு அத்தியாவசியமான தேவையாக இருந்தது.
அவளை யாராவது திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியிருந்தால், மகிழ்ச்சியுடன் இல்வாழ்க்கையில் நுழைந்திருப்பாள். அப்படி இல்லாத பட்சத்தில் இந்த முடிவிற்குத்தான் அவளால் வரமுடிந்தது.
இதுவரை தனக்குக் கிட்டாத வாழ்க்கை இனியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்க அவள் தயாராக இருந்தாலும், குள்ளநரிகள் நிறைந்த இந்தச் சமூகத்தை நம்ப அவள் தயாராக இல்லை.
என்றாவது அவனது மனம் மாறித் தன்னை ஏற்றுக்கொள்வான் என்ற எண்ணம் அவ்வப்போது அவளது மனத்தில் எழத்தான் செய்தது. ஆனால், ‘அன்னையின் தொடர் வற்புறுத்தலால் திருமணத்திற்குச் சம்மதித்து விட்டேன்என்று அவன் சொன்னபோது மனதளவில் அவள் தொய்ந்து போனாள்.
தன்னைப் பற்றி பிரபுவின் பெற்றோருக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், அவர்களது அந்தஸ்திற்கும், கௌரவத்திற்கும், திருமணமே செய்து கொள்ளாமல் அவர்கள் மகனுடன் சேர்ந்து வாழும் தன்னை, மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் நன்றாகத் தெரியும்.
அதனாலேயே அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வருத்தத்தை மறைத்துக் கொண்டு, அவனது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தாள்.
அவளை ஆச்சரியமாகப் பார்த்தவன், “நீ ஏதாவது பிரச்சனை பண்ணுவேன்னு நினைச்சேன் ஜோ! ஆனா, இப்படி என்னை விஷ் பண்ணுவேன்னு நினைக்கவேயில்ல. இப்பத்தான் உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குஎன்றான்.
அப்போ இவ்வளவு நாள் பிடிக்காமல்தான் இருந்தீங்களா?” இலகுவாக கேட்பது போல கேட்டாலும், மனதிற்குள் அழுது கொண்டிருந்தாள்.
உன்னைப் பிடிக்காமல் இருக்குமா ஜோ!” என்று ஆசையுடன் அவளைத் தழுவிக் கொண்டான்.
ஏய்! நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீ சிரிச்சிட்டு இருக்க…” என்று அவன் சீற, அவள் நினைவுலகுக்கு வந்தாள்.
பரிதாபமாக பார்த்தவளைப் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருந்தது.
அவளது கையைப் பற்றித் தூக்கியவன், “நான் கிளம்பறேன். பத்திரம்…” என்று அவளது கன்னத்தில் தட்டிவிட்டுக் கிளம்பினான்.
காரை அறைந்து மூடியவனுக்கு உள்ளுக்குள் இனம்புரியாத கோபம் கனன்று கொண்டிருந்தது. ஆனால், யார்மீது? எதற்கு? என்பது அவனுக்கே தெரியவில்லை.
ப்ரீஃப்கேஸை கட்டில் மீது எறிந்தவன், சட்டையைக் கழற்றி சோஃபாவில் வீசியெறிந்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தான்.
அமர்ந்த நிலையிலேயே உறங்கிவிட்டிருந்த சஹானா, தன்மீது எதுவோ வந்துவிழுந்த அதிர்வில் சட்டென விழித்தெழுந்தாள். குளியலறைக்குள் நழைந்த கணவனைக் கண்டாள்.
இன்னும் சாருக்குக் கோபம் போகலையா? இல்ல இழுத்துப் பிடிச்சி நடிக்கிறாரா?’ எண்ணிக்கொண்டே அவனது வருகைக்காக காத்திருந்தாள்.
விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் விழுந்தவன் தோளில், உரிமையுடன் சாய்ந்து கொண்டாள் சஹானா.
இன்னும் கோபம் போகலையா?”
கெஞ்சலும், கொஞ்சலுமாக அவள் கேட்க, பிரபுவிற்கு எரிச்சலாக வந்தது.
கொஞ்சம் தள்ளிப் படுக்கறியா. மனுஷன் என்ன மூட்ல இருக்கான்னு தெரியாம உயிரை வாங்காதேஎன்று எரிந்து விழுந்தான்.
தனது திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “சாரிஎன்றவள், அவனிடமிருந்து விலகிப்படுத்தாள்.
பிஸினஸில் ஏதேனும் பிரச்சனையோ?என்று நினைத்தவள், அதே நினைவுடன் உறங்கிவிட்டாள்.
அரைகுறை உறக்கத்திலிருந்த பிரபு இப்படியும்,அப்படியுமாக புரண்டு கொண்டிருந்தான்.
பாவம் பிரபு! அந்தப் பொண்ணு உங்களை நம்பி வந்திருக்காஎன்ற ஜோவின் குரல் மீண்டும் மீண்டும் அவனது காதுகளில் ஒலிக்க, திடுக்கிட்டுக் கண்விழித்தான்.
உடல் முழுவதும் தெப்பலாக நனைந்திருந்தது.
அருகில் நித்சலனமாய் உறங்கிக்கொண்டிருந்தவளைப் பார்க்கப் பார்க்க, ‘இத்தனைக் குழப்பத்திற்கும் இவள் தானே காரணம்என ஆத்திரமாக வந்தது அவனுக்கு

உறவு வளரும்...

No comments:

Post a Comment