அத்தியாயம் - 15
“அத்தை! கொஞ்சம்
தண்ணி கொடுக்கறீங்களா?”
சமையலறை வாசலில் நின்று குரல் கொடுத்தான் பிரபு.
பாத்திரங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த சுகுணாவும், அடுப்பை துடைத்துக் கொண்டிருந்த பரிமளமும் ஒரு சேர திரும்பிப் பார்த்தனர்.
“என்ன மாப்பிள்ளை நீங்க போய்…”
பாதியில் நிறுத்தியவர் பாட்டிலில் ஊற்றி வைத்திருந்த தண்ணீரை எடுத்துக்
கொடுத்தவர், “இந்த சஹி எங்கே போனா?” என்றார்.
“இருக்கட்டும் அத்தை… அவள் அண்ணிகூட பேசிட்டு இருக்கா”
என்றவன் தண்ணீரை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றான்.
“மணி பதினொன்னு ஆகுது இன்னும் படுக்கப் போகாமல் இவளுங்களுக்கு என்ன பேச்சு?” படபடத்த பரிமளம், “சுகுணா!
நீ போய் அந்தச்
சஹானாவை முதல்ல ரூமுக்குத் துரத்திவிடு” என்று சுகுணாவை அனுப்பிவைத்தார்.
“என்னால முடியல… ஹா ஹா ஹா…”
அடக்கமட்டாமல் சிரித்த தமக்கையை கூச்சமும், சிரிப்புமாகப் பார்த்தாள் சஹானா.
“உன் உடம்பு அலண்டு போயிடும்னு தூத்துக்குடி வரைக்கும் ஃபளைட்ல
வந்து அங்கிருந்து கார்ல வந்தீங்களா? இதெல்லாம் ஓவரா இல்ல... ரெண்டு நாள் உடம்பு சரியில்லாததுக்கு
இத்தனை ஆர்ப்பாட்டமா...” சொல்லிச் சொல்லிச் சிரித்த தமக்கையைப் பார்த்து
தலையிலடித்துக் கொள்ள வேண்டும் போலயிருந்தது சஹானாவிற்கு.
“இதுக்குத் தான் நான் சொல்லாமல் இருந்தேன். ஏன் தேவி சொன்ன?” என்று நாத்தனாரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“நான் எதார்த்தமா தான் அண்ணி
சொன்னேன். பெரியண்ணி இப்படிச் சிரிப்பாங்கன்னு எனக்கென்ன தெரியும்?”
அவள் அப்பாவியாகச் சொல்வது போலயிருந்தாலும், அவளது
குறும்புப் பார்வை அதைப் பொய் என்று காட்டிக் கொடுக்கவே செய்தது.
‘எல்லாம் இந்தப் பிரபுவால…
கார்ல தானே போகப் போகிறோம் என்று சொன்னதற்கு அவன் கொஞ்சமும் ஒப்புக்
கொள்ளவேயில்லை. இப்போது இவர்களுக்கிடையில் நன்றாக மாட்டிக் கொண்டு
விழிப்பது நான் தானே’ என்று நினைத்துக் கொண்டவள், “போதுங்க்கா! ஒரேடியா ஓட்டாதே” என்று சிணுங்கினாள்.
“எவ்ளோ நல்ல சான்ஸ் இதை எப்படி
விடறது? ப்ளீஸ் சஹி! அத்தானுக்கும், ஸ்ரீ
அண்ணாவுக்கும் மட்டும் சொல்லிக்கிறேன்… வேற யாருக்கும் சொல்லலை
ஓகேவா?”
“ஆஹா போதுமே! நீ ஊருக்கே தமுக்கு அடிச்சி சொன்னாகூட நான் கவலைப்படமாட்டேன். ஆனா, இவங்க ரெண்டு பேருக்கும் சொன்னா என்னைப் பார்க்கும்
போதெல்லாம் இதைச் சொல்லிச் சொல்லியே என்னைக் கடுப்படிப்பாங்க… ப்ளீஸ்க்கா!” என்று கெஞ்சினாள்.
“அப்போ அத்தான்கிட்ட மட்டுமாவது
சொல்லிக்கிறேன்… சஹி! இல்லனா என் மண்டையே
வெடிச்சிடும்” பரிதாபமாகச் சொன்ன அக்காவை உர்ரென்ற முகத்துடன்
முறைத்தாள்.
“இன்னும் எதாவது பேசின அக்கான்னு
பார்க்கமாட்டேன்… சொல்லிட்டேன்” என்று கண்களை
உருட்டினாள்.
“ஏன்டி இப்படிக் கண்ணை உருட்டுற?
அப்புறம் நான் பயந்திடுவேன்… அதனால” என்றபடி எழுந்தவள், “அண்ணா! இங்கே
கொஞ்சம் வாயேன்…” என்று கத்த, சஹானா பட்டென
எழுந்து அவளது வாயை மூடினாள்.
“ஏய்! சொல்லலை… விடுடி” என்று வர்ஷா சிரிப்புடன்
தங்கையிடம் சொல்லிக் கொண்டிருக்க, “முடியாது… நீ முதல்ல இங்கே உட்காரு” என்று தமக்கையைப் பிடித்து
இழுத்தாள் சஹானா.
அதேநேரம் அங்கே
வந்த சுகுணா, “அட ராமா!
கல்யாணமான பொண்ணுங்க மாதிரியா நடந்துக்கறீங்க ரெண்டு பேரும்”
என்று மெதுவாக அதட்ட, சகோதரிகள் இருவரும் கப்சிப்பென
அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன ஆன்ட்டி
நீங்க? நான் ஃப்ரீயா டபுள்யூ. டபுள்யூ.
எஃப் பார்த்துட்டு இருந்தேன். நீங்க இப்படி இண்டர்ஃபியர் பண்ணிட்டீங்களே!”
என்று தேவி சலித்துக் கொண்டாள்.
அதற்குள் தங்கையின்
காதில், “பார்த்தியா அம்மாகூட ராமான்னு அண்ணனைத்
தான் கூப்பிடுறாங்க… அவங்களைப் போய் வாயைப் பொத்து பார்ப்போம்…”
என்றாள் வர்ஷா.
“ஹய்யோ சிரிப்பே
வரலை… நீ வேற ஜோக் ஏதாவது ட்ரை பண்ணு” என்று
சொல்லிவிட்டு ஈயென பற்களைக் காட்டினாள்.
“வெவ்வெவே”
என்று வ்ர்ஷா பதிலுக்குச் சொல்ல, “ஏன்டி அடங்கவே
மாட்டீங்களா ரெண்டு பேரும்?” என்று இடை புகுந்தார் சுகுணா.
“நான் ஒண்ணும்
பண்ணலமா! அக்காதான்” என்று சஹி ஆரம்பிக்க,
“அது என்னன்னாம்மா!” என்று வர்ஷா இடைபுக மீண்டும்
சகோதரிகளுக்குள் கடாம்புடாம் என்று பேச்சு ஆரம்பித்தது.
“போதும்டா
சாமி!” என்று தலையிலடித்துக் கொண்டு, “சஹி!
எழுந்திரு நேரமாகுது. போய்ப் படு. நாளைக்குப் பேசிக்கலாம்”
என்று அவளது கரத்தைப் பிடித்து எழுப்பி விட்டார்.
“தேவி!
நீ பெரியண்ணி கூட இங்கேயே படுத்துக்கம்மா” என்று
சொல்லிவிட்டு, “நீ வாடி” என்று சின்ன மகளைக்
கையோடு அழைத்துச் சென்றார்.
“கல்யாணம்
ஆனாலும் இன்னும் குழந்தை மாதிரி சண்டை போட்டுகிட்டு… போ உன் ரூமுக்கு…”
என்றார் அதட்டலாக.
முகத்தைச் சுருக்கிப்
பார்த்தபடி முணுமுணுத்துக் கொண்டே செல்பவளை பார்த்துக் கொண்டே கீழே நின்றிருந்தார்
அவர்.
*************
“ஹாய் பொண்டாட்டி!”
அறைக்குள் நுழைந்தவளை ஆசையுடன் அணைத்துக் கொண்டான் பிரபு.
“என்னவோ பத்து
நாள் பார்க்காதது போல இப்படி ஒரு பில்டப்?” என்றாள் கிண்டலாக.
“ப….த்….து… நாளா? விளையாடுறியா நீ? சான்சே இல்ல…” என்றவன் தனது காதல் மொத்தத்தையும் அணைப்பிலும், இடைவிடாத
முத்தத்திலும் காட்டினான்.
அவனை நெட்டித்
தள்ளிவள், “அங்கே என் மானம் போகுது. உங்க தங்கச்சி வாயை வச்சிகிட்டு சும்மா இல்லாம, நாம ஃப்ளைட்ல வந்த கதையை விலாவரியா
எங்க அக்காகிட்ட சொல்லியாச்சு…” என்றாள் எரிச்சலுடன்.
“அதனால என்னடா
சின்னு? நான் உன்மேல எவ்வளோ லவ் வச்சிருக்கேன்னு அவங்களுக்குப்
புரியுமில்ல…” என்று சொல்லிக் கொண்டே அவளை மீண்டும் அணைத்தான்.
“நான் என்ன
மனுஷியா? இல்ல வேற ஏதாவதா… உருகினா ஒரேடியா
உருக வேண்டியது. இல்லனா முகத்தைப் பார்த்துப் பேசறது கூட கிடையாது…
லவ்வாம் லவ்வு பொல்லாத லவ்வு” கடுகடுவென்ற முகத்துடன்
சென்று படுக்கையில் விழுந்தாள்.
இடுப்பின் இரு
பக்கங்களும் கைகளை வைத்துக் கொண்டு அவளைக் கேள்வியுடன் பார்த்தான்.
“எதுக்கு
இந்தக் கோபம்? ரெண்டு நாள் ஆஃபிஸே கதின்னு இருந்ததுக்கா?
எல்லாம் உனக்காகத் தானேடி… லூசு!” எரிச்சலுடன் சொன்னான்.
“அதுக்காக,
வாயைத் திறந்து பேசக்கூட முடியலையா ஐயாவால… நாங்களே
ஏங்கி ஏங்கி வரணும்னு நினைச்சீங்க போல…”
வலது கரத்தை
தலைக்கு முட்டுக் கொடுத்து, ஒய்யாரமாக சயனநிலையிலேயே கேள்வி கேட்டவளை வில்லங்கமான பார்வை பார்த்தான்.
“கண்டு கொண்டேன்,
கண்டு கொண்டேன்…” என்று பாடியபடி கைலியைச் சற்று
உயர்த்திக் கட்டியவன், கட்டிலை நெருங்கினான்.
“என்னத்தை
கண்டு கொண்டீங்க?” அழகாகக் கழுத்தை நொடித்தாள்.
“என் பொண்டாட்டி
இன்னைக்குச் செம ரொமான்ஸ் மூட்ல இருக்கான்னு கண்டு பிடிச்சிட்டேன்…” இரகசியக் குரலில் பகன்றவன், அவளது இடையை வளைத்து இழுத்தான்.
“அதெல்லாம்
ஒண்ணும் இல்ல. கையை எடுங்க…” – வேகமாகத்
தள்ளிவிட்டாள்.
“இல்ல இல்லன்னு
சொன்னா, ஆமாம்… ஆமாம்னு அர்த்தம்…”
என்று கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.
“இது எந்த
ஊர்ல?”
“ரொமான்ஸ்ல….”
அவளது காதோரம் கிசுகிசுத்தான்.
“அப்போ,
ஆமாம்னு சொன்னா…?”
விரிந்த இமைகளுக்கிடையில்
கருவண்டு விழிகள், அவனது பதிலுக்காக காத்திருந்தன.
“ஹா ஹா!
இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு கிடையாது. எப்பவும் ஒரே பேச்சு தான்…” மந்தகாசமாகப் புன்னகைத்தான்.
“அப்படின்னா?”
கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“ஆமாம்னாலும்,
ஆமாம் தான்…” சொல்லிக் கொண்டே தனது காரியத்தில்
இறங்கினான்.
தன்னிடமிருந்து
விலகி கட்டிலில் சாய்ந்து அமர்ந்து சிரித்தவனை, பொய்க் கோபத்துடன் பார்த்தாள்.
அவன் இன்னும்
பலமாகச் சிரிக்க, பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து, “முரட்டுப் பயலே!”
அவனை இரண்டு அடி அடித்தாள்.
“சஹி!
சொன்னா கேளு… அப்புறம் பின்விளைவு ரொம்ப மோசமா
இருக்கும்” என்று மேலும் சிரித்தான்.
“பின் விளைவு,
முன்விளைவை வரும் போது பார்த்துக்கறேன்…” என்று
இன்னும் இரண்டு போடு போட்டாள்.
“ஏய்!
சொன்னா கேட்கமாட்ட… அப்போ அனுபவி” என்றவன் வேகமாக அவளைத் தன்பக்கமாக இழுத்தான்.
சற்றும் அதை
எதிர்பார்க்காதவள், அவனது பிடியில் வசமாகச் சிக்கிக் கொண்டாள்.
“பிரபு!
சாரி சாரி… ப்ளீஸ்!”
அவளது கெஞ்சல்கள்
எல்லாம், அவனுக்குக் கொஞ்சல் மொழிகளாக மாறிப் போனது.
தனது கையணைப்பில்
சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியை, விழியகலாமல் பார்த்தான். கடமைக்காக என்றிருந்த
தன்னை, உண்மையான காதல் கணவனாக மாற்றியவளது நெற்றியில் மெல்ல இதழ்
பதித்தான்.
ஆனால், நெருஞ்சிமுள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும்
கடந்த காலத்தின் மிச்சங்களை மட்டும் களையும் வழி தெரியாமல், மனத்திற்குள்
புழுங்கிக் கொண்டிருந்தான்.
No comments:
Post a Comment