அத்தியாயம் - 54
ஷீலா கொடுத்துவிட்டுச் சென்ற பழச்சாற்றை அவ்வப்போது கடமைக்காக பருகினாலும், ஜோஷிதாவின் மொத்த கவனமும் பிரபுவையே வட்டமிட்டது.
அவள் நினைத்தது போலவே சூரஜ்ஜைத் தேடிச் சென்ற ஷீலா, பிரபுவுடன் பேசிக் கொண்டிருந்தவனை ஒருபக்கமாக இழுத்துச் சென்றாள்.
மனைவியின் இழுப்பிற்கு வளைந்து கொடுத்தவனை, பிரபு ஏதோ சொல்லிச் சிரிக்க, அதை ஏற்றுக் கொள்வதைப் போல சூரஜ்ஜும் தலையாட்டிச் சிரித்தபடி செல்வதையும் கண்டாள்.
ஜோஷிதாவை ஏன் அழைத்தாய் என்று சூரஜ்ஜிடம், அவள் கேட்கப் போவதை அறிந்திருந்தாலும், அதற்கெல்லாம் அவள் கவலைப்பட தயாராக இல்லை.
அவளது ஒரே இலக்கு, பிரபு… பிரபு… பிரபு மட்டுமே.
ஒருமுறை ஏமாற்றத்தைச் சந்தித்திருந்ததால், மீண்டும் அந்த வேதனையை எதிர்கொள்ள அவள் தயாராக இல்லை.
பழச்சாற்றை ஒருபக்கமாக வைத்துவிட்டு, பிரபு இருந்த திசையை நோக்கி நடந்தாள்.
வந்திருந்த கூட்டத்தில் இரண்டொருவர் அவளை அடையாளம் கண்டுகொண்டு மெல்லிய குரலில் ஏதோ பேசியதைப் பொருட்படுத்தாமல், தலையை நிமிர்த்திக் கொண்டு அவர்களைக் கடந்து சென்றாள்.
“ஹாய் ஹனி! உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு…” என்றபடி அவளது கையைப் பிடித்தவனை, எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏம்ப்பா… ஒரு மாதிரி இருக்க… ஓஹ்! பிரபு அவனோட மனைவியோட வந்திருக்கறதை பார்த்துட்டியா…” என்று லஜ்ஜையே இல்லாமல் சிரித்தவனை, அருவருப்புடன் பார்த்தவள் கையை உருவிக் கொண்டு விடுவிடுவென நடந்தாள்.
மனத்திற்குள் ஆத்திரமும், கோபமும் கனன்றது.
‘இவனைப் போன்ற சில வல்லூருகளால் தானே தன் வாழ்க்கையின் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தேடி அலைகிறேன்’ என்று நினைத்துக் கொண்டே சென்றவள், அங்கே பிரபுவைக் காணாமல் பார்வையைச் சுழலவிட்டாள்.
கையிலிருந்த குழந்தையை சஹானாவிடம் கொடுத்துவிட்டு அவளருகில் அமர்ந்தவன் ஏதோ சொல்லவும், அவளும் பதிலுக்குச் சிரித்தபடி பதில் சொல்வதையும் பார்த்தவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
சஹானாவின் புன்னகை நிறைந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க, ஜோஷிதாவின் உடலே பற்றி எரிந்தது. இதற்கு மேலும் பொறுமை காக்க அவளால் இயலவில்லை. சஹானாவின் முகத்தில் தெரியும் சிரிப்பை அழிக்க வேண்டும் என்று வெறியே வந்தது.
சூரஜ்ஜின் செகரட்டரி மூலமாக திருமண வரவேற்பைக் குறித்து அறிந்து கொண்டவள் பிரபுவைக் காணவேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே வந்தாள்.
அன்று ரெஸ்டாரண்டிலிருந்து கோபத்துடன் கிளம்பிச் சென்ற பிறகு, அவனைப் பார்க்கவேயில்லை. மறுநாளே அவன் போன் செய்த போதும், ஜோஷிதா வேண்டுமென்றே போனை எடுக்காமல் தட்டிக் கழித்தாள்.
மேலும் இருமுறை அதேதான் நடந்தது.
‘அவன் எப்படியும் தன்னை அணுகுவான் என்றே எண்ணினாள். சடுதியில் அவனிடம் அடங்கிவிடவும் தயாராக இல்லை. அத்துடன், அவனைத் தனது வீட்டிற்கே வரவழைப்பது ஒன்றே அவளது குறிக்கோளாக இருந்தது.
ஆயினும், என்ன காரணமோ… அதன்பிறகு அவன் அவளைப் போனில் கூட தொடர்பு கொள்ளவில்லை. கடைசியில் அவளது கதை இலவு காத்த கிளியாகப் போனது தான் மிச்சம்.
எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனவளுக்குத் தானாக போன் செய்து பேசவும் தயக்கமாக இருந்தது. அத்துடன் அவனுக்குப் பணிந்து செல்வதைப் போலிருக்கும் என்று எண்ணி அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.
அப்போது தான் இந்த திருமண வரவேற்பைக் குறித்து அறிந்தவள் அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைத்தாள். அத்துடன் தன்னைக் கண்டதும் நிச்சயம் அவன் பேச விழைவான் என்று எதிர்பார்த்தாள்.
இப்படி மறைந்து மறைந்து அவர்களது பார்வைப் பரிமாற்றங்களையும், அன்னியோன்யத்தையும் பார்த்து மனத்திற்குள் புழுங்குவதைவிட, தன்னைக் கண்டதும் சஹானாவின் முகத்தில் தோன்றப் போகும் மாற்றத்தைக் காணவே ஆவலுடன் அவர்களெதிரில் சென்றாள்.
*********
ஜோஷிதாவைக் கண்டதும், ‘இவள் எப்படி இங்கே வந்தாள்?’ என்ற கேள்வியுடன் புருவங்கள் நெரிபட அவளைப் பார்த்தான் பிரபு.
அவனது பார்வையில் தன்னைக் கண்ட சந்தோஷம் துளிகூடத் தெரியாததால் விளைந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சஹானாவின் முகமாற்றத்தைக் காண ஆசையுடன் அவளைத் திரும்பிப் பார்த்தாள்.
சஹானாவோ, ‘நீ இங்கே வருவன்னு எனக்குத் தெரியும் என்பதைப் போன்ற ஒரு ஏளனப் பார்வையை அவள்மீது வீசினாள்.
ஏற்கெனவே கடுப்பில் இருந்தவளுக்குத் தன்னைப் பார்த்த பின்பும் முகத்தில் எவ்வித மாற்றங்களையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அமர்ந்திருந்தவளைக் காணவே ஆத்திரமாக வந்தது.
அத்தனைச் சீக்கிரம் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற வைராக்கியத்துடன், “என்னை இங்கே எதிர்பார்க்கல இல்ல…பிரபு!” என்று சிரித்தாள்.
கேள்வி மட்டும்தான் பிரபுவிற்கு. அவளது பார்வை முழுவதும் சஹானாவிடமே இருந்தது.
பிரபு பதில் சொல்லாமல் திரும்பிச் சஹானாவைப் பார்த்தான்.
அவளோ, சற்றும் சளைக்காமல் ஜோஷிதாவின் கண்ணோடு கண் நோக்கினாள்.
“பிரபு வேணா எதிர்பார்த்திருக்க மாட்டான். உனக்கு நேர்ல வந்து பத்திரிகை வச்சி கூப்பிட்ட நான் எதிர்பார்க்காம இருந்தாதான் தப்பு…”
திடீரென அங்கே ஒலித்த சூரஜ்ஜின் குரலால், திடுக்கிட்டுத் திரும்பினாள் ஜோஷிதா.
என்ன பேசுவதென்று தெரியாமல் பார்த்தவளிடம், “மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு நீ கேள்விப்பட்டதே இல்லையா…” என்று அடிக்குரலில் சீறினான் சூரஜ்.
நிலைமை கைமீறும் முன் அதைக் கட்டுக்குள் கொண்டுவர நினைத்த பிரபுவும், சஹானாவும் எழுந்து நின்றனர். அவர்கள் இருந்தது ஹாலில் ஒரு பக்கமாக இருந்ததால், மற்றவர்களது கவனம் அவர்கள் மீது விழுவது அத்தனைச் சுலபமில்லை.
என்றபோதும், அங்கே சூரஜ்ஜும் இருந்ததால்… பிறர் கவனத்தைக் கவர ஏதுவாகிவிடும் என்று எண்ணினர்.
“அண்ணா! ப்ளீஸ் விட்ருங்க…” மெல்லிய குரலில் சொன்னாள் சஹானா.
அவளது வார்த்தைக்கு மரியாதை கொடுத்தோ என்னவோ சூரஜ் அமைதியாக இருக்க, ஜோஷிதாவிற்கு அவமானமாக இருந்தது. அதிலும், சஹானா இதில் தலையிட்டதை அவளால் தாளமுடியவில்லை.
வேகமாக நிமிர்ந்தவள், இன்னும் தன்னை முறைத்துக் கொண்டிருந்த சூரஜ்ஜைக் கண்டதும் சட்டென அடங்கிப் போனாள்.
“நீயெல்லாம்…” என்று ஆரம்பித்தவனை, “சூரஜ் என்னதிது? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க…” ஷீலா கணவனைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள்.
“எங்களைப் பார்த்தா முட்டாளா தெரியுதா உனக்கு. எவ்வளவு தைரியமிருந்தா என் வீட்டு விசேஷத்துக்கு, நான் கூப்பிடாமலேயே வந்ததில்லாம இப்படிச் செய்வ…” என்று உறுமினான்.
“விடுடா சூரஜ்…” என்று அவனைச் சமாதானப்படுத்திய பிரபு, “ஜோஷிதா! நீ முதல்ல கிளம்பு…” என்றான்.
விழிகள் விரிய பிரபுவைப் பார்த்தவள், விடுவிடுவென அந்த ஹாலிலிருந்து வெளியேறினாள்.
அந்தநேரம் ஜோஷிதாவைப் பார்க்க சஹானாவிற்கே பரிதாபமாக இருந்தது.
பிரபு நீண்ட பெருமூச்சை வெளியிட்டபடி இருக்கையில் அமர, “சாரிடா!” என்று நண்பனின் தோளில் தட்டிக் கொடுத்தான் சூரஜ்.
அவர்களது முகங்களை மாறிமாறிப் பார்த்த குழந்தை சிணுங்க ஆரம்பிக்க, மகனை வாங்கிக் கொண்ட ஷீலா, கையோடு சூரஜ்ஜையும் அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.
நல்லவேளை இந்த நேரத்தில் மாமியார் இங்கில்லாமல் இருப்பதே நிம்மதி என எண்ணிக் கொண்டே திரும்பியவள், ஜோஷிதா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த கணவனை, கூர்ந்து நோக்கினாள்.
அத்தனை நேரமிருந்த குதூகலமும், மகிழ்ச்சியும் மறைந்து போயிருந்த சூழலில், “அண்ணி! சாப்பிட வரீங்களா… அம்மா உங்களைக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க” என்றபடி வந்தாள் தேவி.
“ம்ம்…” என்றவள் பிரபுவிடன், “சாப்பிடப் போகலாமா?” என்று கேட்டாள்.
“நீ போய்ச் சாப்பிடு. நான் கொஞ்சநேரம் கழிச்சி வரேன்” என்றான்.
அழுத்தமான பார்வை ஒன்றை அவன்மீது பதித்துவிட்டு, அதற்குமேல் அவனை வற்புறுத்தாமல் தேவியுடன் சென்றாள்.
பெரியவர்கள் ஒருபக்கமாக பேசிக்கொண்டே சப்பிட்டுக் கொண்டிருக்க, சஹானாவும், தேவியும் சற்று தள்ளி அமர்ந்திருந்தாள்.
தேவி, சாப்பாட்டின் ருசியை சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்க, ஒப்புக்குப் புன்னகைத்தபடி தட்டிலிருந்த உணவை ஸ்பூனால் அளைந்து கொண்டிருந்தாள் சஹானா.
அவளது மனம் நடந்தவற்றையே அசைபோட்டுக் கொண்டிருந்தது. ‘நிச்சயம் பிரபு, ஜோஷிதாவைத் தேடிச் சென்றிருப்பான் என்று நினைத்தவளால் சாப்பிடவே முடியவில்லை.
குழந்தையுடன் அவளருகில் வந்தமர்ந்த ஷீலா, தேவியிடம் பேசிக்கொண்டே சஹானாவை கவனித்தாள்.
அவளது முகத்தைப் பார்த்து எதையும் கண்டறிய முடியவில்லை என்றாலும், அவளது மனத்தை அரித்துக் கொண்டிருக்கும் நிகழ்வின் ரணத்தை, ஷீலாவால் உணர முடிந்தது.
“நான் போய் கைகழுவிட்டு வந்திடுறேன் அண்ணி! உங்களுக்கு ஐஸ்க்ரீம் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.
“வேணாம் தேவி!” என்று மறுத்தாள் சஹானா.
“ஷீலா அண்ணி! உங்களுக்கு…”
“கொண்டு வாயேன்” என்றாள் அவள்.
தேவி அங்கிருந்து சென்றதும், “சாரி சஹி! இதை நானே எதிர்பார்க்கல…” என்றாள் வருத்தத்துடன்.
உதட்டை அழுந்த கடித்தவள், “பரவாயில்ல ஷீலா! ஆனா…, என்னைப் பலவீனமாக்கற எந்த விஷயத்தையும் நான் விரும்பறதில்ல… ப்ளீஸ்” என்றாள்.
‘என் விஷயத்தில் தலையிடாதே’ என்று மறைமுகமாக அவள் சொல்வது புரிந்தாலும், ஷீலாவால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“புரியுதுப்பா! ஆனா, மனசு கேட்கல…” என்றாள்.
அதுவரை உணவை அளைந்து கொண்டிருந்தவள், மேற்கொண்டு அந்தப் பேச்சை வளர்க்க விரும்பாமல் உணவை வாயில் அடைத்துக் கொண்டாள்.
‘இவள் சாமர்த்தியசாலிதான். ஜோஷிதாவின் எந்த ஆட்டமும், இவளிடம் செல்லுபடியாகாது’ என்று அவளை மெச்சிக் கொண்டாள்.
ஐஸ்கிரீமுடன் தேவி வருவதைக் கண்டதும், ஷீலாவின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை துள்ளி குதிக்க ஆரம்பித்தான்.
“ஆஹா! திருட்டுப் பயலே ஐஸ்க்ரீம் வேணுமா உனக்கு…” என்றபடி தேவி கையை நீட்ட, பட்டென அவளிடம் தாவினான் குழந்தை.
“இப்படி இலஞ்சம் கொடுத்தாதான் என்கிட்ட வருவியா நீ…” என்றவள் கொஞ்சமாக ஐஸ்கிரீமை குழந்தைக்கு ஊட்ட, சந்தோஷத்தில் கையைத் தட்டி ஆர்ப்பரித்தான் சிபி.
இருவரும் ஆட்டமும், பாட்டமுமாக சாப்பிடுவதை முறுவலுடன் பார்த்தாள் சஹானா. அந்த மழலையின் சிரிப்பில் சற்று நேரம் தனது கவலைகளை மறந்தே போனாள்.
பாதி கப் காலியாவதற்குள் ஐஸ்கிரீம் திரவக் கூழாக மாறியிருந்தது. கையைத் தட்டி உட்கார்ந்த நிலையிலேயே குதித்த குழந்தையின் கைபட்டு ஐஸ்கிரீம் தேவியின் உடையில் கொட்டிக் கொண்டது.
“ஹய்யோ! என் சூட் போச்சு…” என்று விட்டால் அழுதுவிடுபவள் போல முகத்தைச் சுளித்தாள் தேவி.
ஷீலா குழந்தையைத் தூக்கிக் கொள்ள, சஹானா டிஷ்யூவால் தேவியின் உடையில் பட்டிருந்த ஐஸ்கிரீமைத் துடைத்துவிட்டாள்.
“இப்படியே விட்டா கறையாகிடும் அண்ணி! வாஷ் பண்ணிக்கிறேன். அப்படியே ஈரமா டிரெஸ் போட முடியாது. எக்ஸ்ட்ரா ட்ரெஸ் கொண்டு வந்திருக்கேன் இல்ல, அதை மாத்திக்கிறேன்” என்றவள், ஷீலாவிடம் சாவியை வாங்கிக் கொண்டு அறைக்கு ஓடினாள்.
கிட்டதட்ட அறைமணி நேரமாகியிருந்த போதும் தேவி வரவில்லை. அவளது மொபைலும் ரீச் ஆகாததால் அவளைத் தேடிச் செல்லும் முடிவுடன் எழுந்தாள் சஹானா.
“இரு சஹி! சிபிக்குத் தூக்கம் வந்திடுச்சி. நானும் உன்னோட ரூமுக்கு வரேன்…” என்றபடி ஷீலாவும் உடன் வந்தாள்.
இருவரும் காரிடாரைக் கடந்து லிஃப்டிற்குக் காத்திருந்த போது எதேச்சையாக திரும்பிய சஹானா தான் கண்ட காட்சியால் ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.

No comments:
Post a Comment