அத்தியாயம் - 59
“அக்கா!” என்றபடி அறைக்குள் வந்த சஹானா தமக்கையை இறுக அணைத்துக் கொண்டாள்.
“ஹேய் சஹி!” என்று ஆர்பரித்த வர்ஷா, “இன்னைக்கு நீ வரேன்னு சொல்லவேயில்ல…” என்று போலியாகக் கோபித்துக் கொண்டாள்.
“அதான் வந்துட்டேன் இல்ல…” என்றவள், தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை ஆசையுடன் தூக்கினாள்.
“என் பொம்மு குட்டி! செல்லக் குட்டி உங்க சித்தி வந்திருக்கேன் கண்ணைத் திறந்து பாருங்க…” என்று கொஞ்சியபடி, குழந்தையைக் கன்னத்தோடு ஒற்றிக் கொண்டாள்.
“சஹிம்மா! என்றபடி உள்ளே வந்த பரிமளத்தைக் கண்டதும், “அத்தை!” என்று ஒரு கையால் அவரை ஆசையுடன் கட்டிக் கொண்டாள்.
“வெளியே உன் வீட்டுக்காரரைப் பார்த்ததும் தான், நீங்க வந்திருக்கறதே தெரிஞ்சது. இந்த ஸ்ரீராம், நீ வர்றன்னு ஒரு வார்த்தைக்கூட சொல்லல…” என்றார் தாங்கலாக.
“அதான் வந்துட்டேன் இல்ல… ஒரு மாசம் டேரா அடிச்சிடுறேன்” என்றாள் சிரித்துக் கொண்டே.
பிரபாகருடன், பிரபுவும் உள்ளே வர, பரிமளம் அவனிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.
அரைமணிநேரம் சென்றதும், “நீங்க கிளம்புங்க… நைட்டெல்லாம் தூங்காம வந்தது டயர்டா இருக்கும். கொஞ்சநேரம் தூங்குங்க. நான் அக்காவோட சேர்ந்து மதியம் வீட்டுக்கு வரேன்” என்றாள்.
“அதான் நாங்கள்லாம் இருக்கோம்… உன் அக்காவை பார்த்துக்க மாட்டோமா. நீ வீட்டுக்குக் கிளம்பு. ஏதாவது வேணும்னா உன்னைக் கேட்கலாம்… தனியா போனா யாரை கேட்பாரு… கிளம்பு கிளம்பு…” என்று அவளை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார் பரிமளம்.
“பரவாயில்ல பெரிம்மா! நான் என்ன விருந்தாளியா? சஹி, அவங்க அக்காவோட இருக்கட்டும். ஏதாவது வேணும்னா அத்தை இருக்காங்க.... ஸ்ரீ இருக்கான் பார்த்துக்கறேன்” என்றவன், விடைபெற்று கிளம்பினான்.
அறையின் வாயில் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்தவளிடம், “சும்மா சொல்லக்கூடாது சஹானா! உன் வீட்டுக்காரன் தங்கம்…” என்ற அத்தையைப் பார்த்து மென்நகை புரிந்தாள்.
***********
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனை, மோகனப் புன்னகையுடன் பார்த்தாள் சஹானா.
தாங்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து, ஒருமணி நேரத்திற்கு மேலாகிறது. புது இடம் என்று எண்ணியதாலோ என்னவோ, குழந்தை ஒரு மூச்சு அழுது தீர்த்து இப்போதுதான் உறங்குகிறாள்.
இது எதையும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை, எப்படி எழுப்புவதென்று புரியவில்லை.
மெல்ல அவனது காதருகில் குனிந்து, “சாப்பிட வரீங்களா! மணியாகுது’ என்று சொல்லியும், அவன் அசையாமல் படுத்திருக்க, என்ன செய்வதென்று யோசித்தாள்.
இரண்டு முறை அவனது மெத்தையில் தட்டி அழைத்தும், அவனது துயில் இம்மியளவும் கலையவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தவளது கண்களில் அவனது செல்போன் பட, எடுத்து அலாரத்தை முடுக்கினாள். ஒரு காலை மடித்துக் கொண்டு ஒரு கையை மெத்தையில் ஊன்றியபடி, செல்போனை அவனது காதருகில் கொண்டு சென்றாள்.
பெருத்த ஓசையுடன் காதருகில் விடாமல் ஒலித்த சப்தத்தில் அவன் பதறிக்கொண்டு எழ, அவள் நிலை தடுமாறி, அவனருகிலேயே விழுந்தாள்.
அவள் சுதாரித்து விலக, பிரபு கேள்வியாக அவளைப் பார்த்தான்.
“என்ன பண்ற நீ?” என்றான்.
‘அடக்கடவுளே!’ என்று தலையிலடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
உறக்கம் கலைந்த எரிச்சலில், “உன்னை தானே கேட்கறேன்…” என்றான்.
“உங்களைச் சாப்பிட கூப்பிட வந்தேன்…” என்றாள் மெதுவாக.
இன்னமும் இருவரும் அசையாமல், அருகருகில் அமர்ந்த நிலையிலேயே இருந்தனர்.
அவன் வியப்பும், கேள்வியுமாக அவளைப் பார்க்க, மெல்ல நகர்ந்து எழுந்து நின்றாள்.
கோபமாக இருந்தவரையில் பிடிவாதமாக அவனை விட்டு விலகியிருந்தவளால், அவனது மனத்தை நன்றாகப் புரிந்துகொண்டபின், நடிப்பிற்காகக்கூட அதைத் தொடர முடியாமல் திண்டாடினாள்.
“அதுக்குப் பேரைச் சொல்லிக் கூப்பிட வேண்டியதுதானே. கதவுல மாட்டின எலி சப்தம் போடுற மாதிரி ஒரு அலாரம்…”
“எல்லாம் கூப்பிட்டேன். அதுகூடத் தெரியாம நீங்க தூங்கினா… நான் என்ன செய்ய? அதனாலதான் அப்படி அலாரம் வச்சேன்” என்றாள்.
“நல்லா ஒய்யாரமா கம்பளியைப் போர்த்திகிட்டு, வீடு வந்ததுகூடத் தெரியாம தூங்கனவங்க, இதைப் பேசக்கூடாது. இதுல தூங்குன்னு சொன்னா… நீங்களும் சேர்ந்து தூங்கவான்னு கௌண்டர் டயலாக் வேற…”
“நான் தூங்கிட்டா... நீங்க எழுப்ப வேண்டியதுதானே.”
“எதுக்கு உன்கிட்ட மூஞ்சால அடிவாங்கறதுக்கா…?”
அதுவரை விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்தவளுக்கு சுர்ரென கோபம் ஏறியது.
“இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படிப் பேசறீங்க? நான் யதார்த்தமா செய்ததுக்குக் கூட உங்களுக்குத் தப்பா தெரிஞ்சா நான் என்ன செய்யறது?” என்று சப்தமாக முணுமுணுத்துக் கொண்டே கட்டிலிலிருந்து இறங்கினாள்.
“முகத்தைக் கழுவிட்டு வாங்க. உங்களுக்காக அண்ணன் சாப்பிடாம வெயிட் பண்றாங்க…” சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது.
வீட்டிலிருந்து கிளம்பும்போது அவள் இருந்ததற்கும், இப்போது அவள் இருப்பதற்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்.
ஜோஷிதாவைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு, அவள் தன்னிடம் இத்தனை உரிமையுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசுவதை, முற்றிலுமாக தவிர்த்திருந்தாள். பிறகு எப்படி?’
பிரபுவிற்குக் குழப்பமாக இருந்தது.
முன்தினம் மருத்துவமனையிலிருந்து கிளம்பிய பிறகுதான், எல்லாமே தலைகீழாக மாறிப் போனது’ என்று விளங்க ஆரம்பித்தது.
அதன்பிறகு, பிரபுவின் விழிகள் அவளை அணுஅணுவாக ஆராயத் துவங்கியது.
வீட்டிலிருப்பவர்களிடம் பேசுவதாகட்டும், குழந்தையைக் கொஞ்சுவதாகட்டும்… எல்லாவற்றிலுமே பழைய சஹானாதான் பிரதிபலித்தாள்.
இரவு ஆண்களெல்லாம் முதலில் சாப்பிட்டு முடித்திருக்க, பெண்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
பிரபாகர் போனில் அலிவலக விஷயமாகப் பேசிக்கொண்டிருக்க, ஸ்ரீராம் சஹானாவை வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
வர்ஷா இரண்டு வாய்கூட சாப்பிட்டிருக்கமாட்டாள், அதற்குள் குட்டிப் பெண் சிணுங்க ஆரம்பித்தாள்.
“இப்போதான் தூங்கினா அதுக்குள்ள எழுந்துட்டா…” என்று வர்ஷா சலித்துக்கொள்ள, “நீங்க இருங்கக்கா! நான் பார்க்கறேன்” என்று சஹானா எழுந்தாள்.
“ரெண்டு பேரும் சாப்பிடுங்க… நான் பார்க்கறேன்…” என்று பிரபு எழுந்து சென்றான்.
“ஹய்யோ குழந்தையைத் தூக்க உங்களுக்கென்ன தெரியும்…” என்றபடி அவனுக்குப் பின்னாலேயே சென்றாள்.
அதற்குள் தொட்டிலில் மினுக் மினுக்கென கண்ணைச் சிமிட்டியபடி கையைக் காலை உதைத்துக் கொண்டு சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தையை லாவகமாகத் தூக்கி அணைத்தபடி வைத்துக் கொண்டான் பிரபு.
சஹானாவுக்கே ஆச்சரியம்…
“என்ன பார்க்கற? சூரஜோட பையனை எத்தனை முறை தூக்கியிருக்கேன்…” என்றவன், “ஹாலுக்குப் போகலாமா ப்ரின்சஸ்!” என்று குழந்தையிடம் பேசினான்.
கையிலிருந்த கதகதப்பிலோ என்னவோ, குழந்தை அவனது முகத்தை அமைதியாகப் பார்த்தாள்.
அவன் தலையை ஆட்டி ஆட்டிப் பேச, புருவத்தை உயர்த்தியும், உதட்டைக் குவித்தும் குழந்தை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தாள்.
“பரவாயில்ல சஹி! உனக்குப் பிரச்சனையே இல்ல… உன் வீட்டுக்காரரே பார்த்துக்குவார்…” என்றாள் வர்ஷா.
“ம், கிரேட் ஸ்ரீராம் பார்த்த மாப்பிள்ளையாச்சே… என்னோட செலக்ஷன் தப்பாகுமா?” என்று டிஷர்ட்டின் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.
“ஆமாம்டா! இதுக்கு மட்டும் வா போதும். ஒரு குழந்தையைத் தூக்கத் தெரியமாட்டேன்னுது” என்றார் அத்தை.
“முதல்ல குழந்தையோட அப்பாவைக் கத்துக்கச் சொல்லுங்க. இன்னமும் கல்யாணமே ஆகல என்னைப் போய் இதெல்லாம் சொல்லிகிட்டு…” என்றான்.
அதுவரை மென்னகையுடன் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்த சஹானா, தமையனின் பேச்சைக் கேட்டதும் உள்ளுக்குள் கலவரமானாள்.
‘என்றாவது ஒருநாள் தன் கணவனின் திரைமறைவு வாழ்க்கை அவனுக்குத் தெரிய வந்தால்… என்ன நினைப்பான்? தான் பார்த்த மாப்பிள்ளை என்று பெருமைப்பட்டுக் கொள்பவன் அதை எப்படி எடுத்துக் கொள்வான்…?’
எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த தங்கையை, ஆழ்ந்து பார்த்தான் ஸ்ரீராம்.
தண்ணீர் பாட்டிலுடன் தங்களது அறைக்கு வந்த சஹானா, கோபத்துடன் ஒலித்த பிரபுவின் குரலைக் கேட்டு அப்படியே நின்றாள்.
“இங்கே பார்.. நான் ஏன் வரல எதுக்கு வரலன்னு உன்கிட்ட காரணம் செல்லிட்டிருக்க முடியாது. ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்க நினைக்காதே… அன்னைக்குச் சொன்னதைத் தான் இன்னைக்கும் சொல்றேன்… உன்னோட இடம் எதுவோ அங்கேயே நில்லு…” என்றவன் போனை அணைத்தான்.
ஆத்திரத்தில் மேல்மூச்சு வாங்கியது.
“இவளுக்கு எவ்வளோ கொழுப்பிருக்கணும்! நேத்து தான் வேலையிருக்குன்னு வரல… இன்னைக்கும் ஏன் வரலைன்னு கேள்வி கேட்கறா… கொஞ்சம் இடம் கொடுத்தா தலைமேலே ஏறி உட்காருவா போல… அறிவு கெட்ட முண்டம்” முணுமுணுத்துக் கொண்டே கதவைத் திறந்தவன், வெளியே சஹானா நின்றிருந்ததைப் பார்த்தான்.
அவனுக்குத் தர்மசங்கடமாக இருக்க… அவளுக்கு அவஸ்தையாக இருந்தது.
“ஏன் இங்கேயே நிக்கிற? உள்ளே வந்திருக்கலாமே…”
நீ என் மனைவி. உனக்குத் தெரியாமல் எந்த இரகசியமும் இல்லை என்ற அர்த்தத்தில் கூறினான்.
“முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கீங்க… நான் வந்தா டிஸ்டர்பென்ஸ் ஆகிடுமோன்னு தான் வரலை” என்றாள்.
கணவனின் மீது கோபம் இல்லையென்றாலும், ஜோஷிதாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் தன்னையும் அறியாமல் ஒரு வெறுப்பு உருவாவதை, அவளால் தவிர்க்க முடியவில்லை.
அதன் காரணமாகவே அவனிடம் பேசும்போது, வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது.
தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு, அவனுக்கு மெத்தையைத் தட்டிப்போட்டாள்.
“நா..ன் அக்காகூட படுத்துக்கறேன்…” என்றவள், ஒரு பெட்ஷீட்டை மட்டும் எடுத்துச் சென்றாள்.
வர்ஷாவின் அறையில் தனக்காக அவள் படுக்கையை விரித்துக் கொண்டிருக்கும் நேரம், பரிமளம் அங்கே வந்தார்.
“சஹி! தூங்காம நீ என்ன பண்றா?” என்றார் அதட்டலுடன்.
“நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க அத்தை! அக்காவோட நான் இருக்கேன்… பார்த்துக்கறேன்” என்றாள் அக்கறையுடன்.
“நல்லாருக்குடியம்மா! பிரபுவை தனியா விட்டுட்டு நீ இங்கே வந்தாச்சா… முதல்ல கிளம்பு. காலைல அவர் ஊருக்கு வேற கிளம்பணும். ஒரு மாசம் இங்கே தானே இருக்கப் போற… அப்போ பார்த்துக்கோ உங்க அக்காவையும், பொண்ணையும்” என்று அவளை விரட்டினார்.
“அம்மா! நீங்களாவது அத்தைக்குச் சொல்லுங்களேன்…” அங்கே வந்த சுகுணாவை பரிந்து பேச அழைத்தாள்.
“அத்தை சொல்றது சரிதான். நீ முதல்ல கிளம்பு…” என்று பெரியவர்கள் இருவரும் அவளை அங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.
முணுமுணுத்துக் கொண்டே அறைக்குச் சென்றவள் தயக்கத்துடன் கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்தவன், மனைவியைக் கண்டதும் கேள்வியுடன் பார்த்தவன், நகர்ந்து வழிவிட்டான்.
உள்ளே வந்தவள், “நான் இங்கேயே படுத்துக்கறேன்…” தயங்கிக் கொண்டே சொன்னாள்.
அவன் எதுவும் சொல்லாமல் செல்ல, கதவை மூடிவிட்டு வந்தவள் கையிலிருந்த போர்வையைத் தரையில் விரித்தாள்.
அவளையும் கட்டிலில் உறங்கச் சொல்லலாம் என்று நினைத்த பிரபு, மறுநொடியே மனத்தை மாற்றிக் கொண்டான்.
சில நிமிடங்கலில் மின்சாரம் போய்விட, ஜன்னல் வழியாக கசிந்த நிலவின் ஒலியும், உடலைத் தழுவிய தென்றல் காற்றும் இதமாக இருந்தது அவனுக்கு.
அறையில் ஏசி இருந்த போதும், அவன் அவற்றை உபயோகப்படுத்துவதில்லை. காலையில் எழும்போதே ஒருவித உடற் சோர்வை கொடுக்கும் ஏசியைவிட, புத்துணர்ச்சியைத் தரும் பொதிகை காற்று அவனுக்குப் பிடித்திருந்தது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு, மனம் நிர்மலமாக இருப்பதாக உணர்ந்தான்.
தலையை மட்டும் திருப்பி, சஹானாவைப் பார்த்தான். அவளுக்கும் தூக்கம் வரவில்லை போலும், புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
“சஹானா! தூங்கிட்டியா?” மெதுவாக குரல் கொடுத்தான்.
“சொல்லுங்க…” என்றாள்.
“நான் ஒண்ணு கேட்பேன். மறைக்காம உண்மையைச் சொல்லணும்…”
என்றான் பீடிகையுடன்.
‘என்ன கேட்கப் போகிறானோ!’ என அவளுக்குத் திக்திக் என்றது.
“கேளுங்க…”
அவள் சொன்ன பதில் அவளுக்கே கேட்டிருக்காது.
அவளைப் பார்த்தவண்ணம் புரண்டு படுத்தவன், “நீ வேற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா சந்தோஷமா இருந்திருப்ப இல்ல…” என்றான்.
அவளிடமிருந்து பதிலே வராமல் போக, “இப்படி ஒரு அவஸ்தையோட… மனசை எப்பவும் அரிச்சிட்டு இருக்கற கேள்வியோட… நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாலும், இவன் முதலில் அப்படி இருந்தவன் தானேன்னு மனசுல சஞ்சலத்தோட…” அவன் சொல்லிக் கொண்டே போக, விருட்டென எழுந்து அமர்ந்தாள் சஹானா.
“இங்கே பாருங்க பிரபு! தனக்கு வரப்போற கணவனோ, மனைவியோ இப்படியெல்லாம் இருக்கணும்னு எதிர்பார்க்கறது மனுஷ குணம். அப்படி இல்லாம போனா அடுத்தவங்களைப் பார்த்து இடிச்சிக்கிறதைவிட, நமக்கேத்தா மாதிரி நம்ம துணையை மாத்திக்கறது தான் புத்திசாலித்தனம்.
கிடைச்சதை வச்சி சந்தோஷப்படுன்னு தான் எங்க வீட்ல எனக்குத் சொல்லிக் கொடுத்திருக்காங்க. கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரிஞ்சா… அதுக்காக ஏங்கற ஆள் நான் இல்ல.
அதேநேரம் எனக்குச் சொந்தமானதை அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க நான் முட்டாள் இல்ல. எந்தக் காரணத்துக்காகவும் உங்களை விட்டுக் கொடுக்க நான் தயாரா இல்ல…” வேகமாகச் சொல்லிமுடித்தவள், திரும்பிப் பிரபுவைப் பார்த்தாள்.
கண்களில் காதலுடன், அவளை விழுங்குவதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
பேச்சோடு பேச்சாக மனத்தை வெளிப்படுத்திவிட்ட தனது முட்டாள்தனத்தை நினைத்து கடிந்து கொண்டவள், அவனது பார்வை வீச்சின் வேகத்தைத் தாளமுடியாமல், படுக்கையில் சாய்ந்தாள்.
கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைக்கக்கூடத் தோன்றவில்லை அவளுக்கு.
‘ஏன் சஹி என்கிட்ட சொல்லல? என்னால் உன்னைப் புரிஞ்சிக்க முடியாதுன்னு நினைச்சிட்டியா? நீ என்னை நம்பவே இல்லைன்னு தான் நேத்து ஊருக்குக் கிளம்பற வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன்.
ஆனா, ஜோஷிதாவைப் பார்க்கணும்னு சொன்னதும் முதல்ல எனக்குப் புரியல. அதுக்கப்புறம் என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு நினைச்ச நீயே, உன்னோட ஒவ்வொரு செய்கையாலும் உன்னை உணர்த்திட்டே இருந்த.
இது போதும் சஹி! எனக்கு எதுவுமே புரியலைன்னே இப்போதைக்கு இருக்கட்டும். நீ நம்ம வீட்டுக்கு வரும்போது சந்தோஷமா, எந்த வருத்தமும் இல்லாம வரணும். வரவைப்பேன். சீக்கிரமே…’
மானசீகமாக அவளிடம் பேசியவன், மனத்தின் இறுக்கம் களைந்தவனாக உற்சாகமாக உணர்ந்தான்.

*************

***************

No comments:
Post a Comment